வெளிநாடுகளில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, புதிய கல்வி உதவித் தொகை திட்டம், அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
'இத்திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெற விரும்புவோர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் விண்ணப்பிக்கலாம்' என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு: 'தேசிய வெளிநாட்டு மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித் திட்டம்' என்ற பெயரில், நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும், இதன் கீழ், வெளிநாடுகளில் உயர்ல்வி படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர் பயன் பெறுவர்.பொறியியல் மற்றும் மேலாண்மை; அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல்; வேளாண்மை அறிவியல் மற்றும் மருத்துவம்; வர்த்தகம், கணக்கியல் மற்றும் நிதி; கலையியல், சமூக அறிவியல் மற்றும் கவின்கலை ஆகிய பிரிவுகளின் கீழ், உயர்கல்வி, ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...