'மாணவ, மாணவியருக்கு, டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி
தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன்,
பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்
துறை உத்தரவிட்டு உள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:* பள்ளிக்
குழந்தைகள் சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன்படி,
அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; உணவு உண்பதற்கு முன்,
கைகளை கழுவ வேண்டும்.
* வகுப்பறைகளை
சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். வகுப்பறை, கழிவறையை
சுற்றி தண்ணீர் தேங்கினால், உடனடியாக தலைமை ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர்
தெரிவிக்க வேண்டும்.
விழிப்புணர்வு
* கொசு பெருக்கத்தை தடுக்க, குடிநீர் பானைகள், தண்ணீர் தொட்டிகளை மூட வேண்டும்.
* டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை, மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்த வேண்டும்.
* மாணவ,
மாணவியருக்கு, கடுமையான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள்
தென்பட்டால், ஆரம்ப சுகாதார மையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்;
பெற்றோருக்கும் அறிவுறுத்த வேண்டும்; சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.
* வரும் 10ம் தேதி, குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அன்று அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், குடற்புழு நீக்க
மருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்; விடுபட்ட குழந்தைகளுக்கு,
13ம் தேதி சிறப்பு முகாம் நடக்கும்.
* இதை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...