பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை, மே முதல் வாரத்தில் வினியோகிக்கவும், ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கவுன்சிலிங் நடத்தவும், அண்ணா பல்கலை முடிவெடுத்து உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கி, 31ம் தேதி
முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் வெளியானதும் வழக்கம் போல், பொறியியல்,
மருத்துவம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
முதல் ஆய்வு கூட்டம்:
இந்த ஆண்டுக்கான, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்குதல்,
கவுன்சிலிங் நடத்துதல் தொடர்பான, முதல் ஆய்வு கூட்டம், அண்ணா பல்கலை
துணைவேந்தர் ராஜாராமன் தலைமையில், நேற்று நடந்தது.
மாற்றம் இல்லை:
இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் மாற்றம் இல்லை. வழக்கம் போல்,
சென்னையில் மட்டுமே, கவுன்சிலிங் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும்,
கடந்த ஆண்டு, பொறியியல் படிப்புகளுக்கு, 2.40 லட்சம் விண்ணப்பங்கள்
அச்சடிக்கப்பட்டு, 2.13 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதே போல், இந்த
ஆண்டும், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இவை, மே முதல்
வாரத்தில் இருந்து, 60 மையங்களில் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணத்தில்
மாற்றம் ஏதும் இல்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 250 ரூபாய்;
பொதுப்பிரிவினருக்கு, 500 ரூபாய். கவுன்சிலிங், கடந்த ஆண்டை போல், இந்த
ஆண்டும், ஜூன் இறுதி வாரத்தில் துவங்கும் என, பல்கலை வட்டாரத்தில்
கூறப்படுகிறது.
'சீட்' உயர்கிறது!
கடந்த ஆண்டு, பொறியியல் கவுன்சிலிங்கில், 517 அரசு, தனியார் கல்லூரிகளில்,
2.05 லட்சம் இடங்கள் இருந்தன. கவுன்சிலிங் முடிவில், 60 ஆயிரம் இடங்கள்
காலியாக இருந்தன. இந்த ஆண்டு, 22 புதிய கல்லூரிகள் சேர்த்து, 539 பொறியியல்
மற்றும் 44 பி.ஆர்க்., கல்லூரிகள் பங்கேற்கின்றன. இதனால், பொறியியல்
இடங்களின் எண்ணிக்கை, 2.10 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...