தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளின் கல்வி மற்றும்
தகவல் தொடர்புத்திறனை உயர்த்து வதாக, அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள்
சூளுரைத்து உள்ளனர்.
அரசுப் பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகளுக்கு மேலாக உயர்த்தவும்,
ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை நவீனப்படுத்தவும், பள்ளிக்கல்வித் துறை
முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, அனைவருக்கும் கல்வி திட்டம்
மற்றும் மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, அரசுப்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சியை துவங்கி உள்ளது.
திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், கடலூர் மற்றும் நாகை உட்பட, 10
மாவட்டங்களைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு, மார்ச் 12
வரை இப்பயிற்சி நடக்கிறது. மொத்தம், 400 தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்து
சுற்றுகளாக, ஒரு சுற்றுக்கு தலா, 80 பேருக்கு நான்கு நாட் கள் பயிற்சி
தரப்படுகிறது. கற்பித்தல் முறை, நிர்வாகத் திறன்; மாணவர்களை பள்ளிக்கு
கவர்ந்து இழுத்தல்; அரசின் திட்டங் களை மாணவர்களிடம் சேர்த்தல்; ஆசிரியர்
குழுவை அரவணைத்து செல்லுதல்; பெற்றோருடன் நட்புறவை வளர்த்தல் உள்ளிட்ட,
பல்வேறு தலைப்புகளில் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது.
தன்னம்பிக்கை கிடைத்தது!
பயிற்சியில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: இதுவரை, பல பயிற்சி
களில் பங்கேற்றாலும், இந்தப் பயிற்சி வித்தியாசமாக பயனுள்ளதாகவும்
இருந்தது. பயிற்சியில் பெற்ற வழிகாட்டுதல்களைப் பின் பற்றி, தனியார்
மெட்ரிக் பள்ளிகளை விட, அரசுப் பள்ளிகளை சிறந்த தரத்திற்குக் கொண்டு வர
உறுதி எடுத்துள்ளோம். இப்பயிற்சி மன உறுதியையும், தன்னம் பிக்கையும்
ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த,
இப்பயிற்சி நிச்சயம் உதவும். மாணவர்களை அரசுப் பள்ளிகளின் பக்கம் அதிக
அளவில் ஈர்க்கவும், சக ஆசிரியர்களை உற்சாகப் படுத்தி, பள்ளியை வளர்ச்சிப்
பாதைக்கு கொண்டு செல்லவும், இப்பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. இவ்வாறு,
அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...