குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம்: தமிழக அளவில் தருமபுரியில் முதல் முயற்சி. அரசுப் பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் முயற்சியாக தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம் நடவு செய்யப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்
சத்துணவு மூலம் மேலும் கூடுதல் சத்துக்கள் கிடைக்கச் செய்யும் வகையில்
தருமபுரி மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது
இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் கொண்ட முருங்கைக்
கீரை மற்றும் காய்கள் பள்ளி வளாகத்திலேயே கிடைக்கும் வகையில் அனைத்து
அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம் நடவு செய்ய சமீபத்தில்
உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தர வின் பேரில் மாவட்ட
கல்வித்துறை இந்த பணியில் 95 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது. தருமபுரி
மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கள் வரிசையில் மொத்தம்
1661 பள்ளி கள் உள்ளன. இவற்றில் 96 ஆயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகள்
படிக்கின்றனர். இவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தை கள்
பள்ளியில் சத்துணவு சாப்பிடு கின்றனர். அதேபோல மாவட்டம் முழுக்க 212 அரசு
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவை அனைத்திலும் 1 லட்சத்து 4
ஆயிரத்து 964 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அவர்களிலும் 80
சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளியில் சத்து ணவு
சாப்பிடுகின்றனர். இவர்களின் உடலுக்கு சத்துணவு மூலம் கூடுதல் சத்துக்களை
சேர்ப்பிக்கும் முயற்சியாகத்தான் இந்த முருங்கை மர திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர்
கூறும்போது, ‘கடந்த சில வாரங்களாக அ ரசுப் பள்ளிகளில் முருங்கை மரம் நடும்
திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 2 முருங்கை
மரங்களை நடவு செய்யும்படி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இட வசதியைப்
பொறுத்து கூடுதலாகவும் முருங்கை மரங்களை நடவு செய்து கொள்ளலாம். இந்த
திட்டத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகை யில், ‘பள்ளிக்கு ஒரு முருங்கை
நட்டு, நிறைவான இரும்புச் சத்து பெறுவோம்’ என்ற வாசகமும்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முருங்கைக் கீரை, பூ, காய் ஆகியவை பள்ளி
வளாகத்திலேயே சத்துணவில் சேர்க்க கிடைத்து விடும். இதுதவிர பப்பாளி,
வல்லாரை கீரை ஆகியவற்றை நடவும் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். இவை அனைத்
துமே குழந்தைகளின் ஆரோக்கி யத்தையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும் குணம்
கொண் டவை. வளரிளம் பருவ மாணவிகளுக்குத் தேவையான சில முக்கிய சத்துக்களும்
இவற்றில் அடங்கியுள்ளன. இந்த உணவு வகைகள் தொடர்ந்து கிடைப்பதன் மூலம்
அரசுப் பள்ளி குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பட்டு அவர்கள் தேர்வுகளில்
அதிக மதிப்பெண்கள் பெறுவதுடன், நுண்ணறிவுத் திறன் கொண்டவர்களாகவும்
உருவெடுப்பர்’ என்றனர். சிக்குர்மேனி கீரை பயிரிட திட்டம் ‘சிக்குர்மேனி’
என்பது அடர்வனப் பகுதிகளில் கிடைக்கக் கூடிய ஒரு கீரை வகை. பல கீரைகளில்
அடங்கியிருக்கும் சத்துக்கள் இந்த ஒரே கீரையில் கிடைப்பதாக ஆய்வில் தெரிய
வந்துள்ளது. எனவே இந்த கீரையை உணவுக்காக அரசுப் பள்ளிகளில் நடவு செய்யவும்
ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...