மெட்ரிக்குலேஷன் தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 219 குருப்
'சி' பணியிடங்கள் அறிவிப்பு. மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான
இந்திய கடற்படை கிழக்கு தலைமையகத்தில் காலியாக உள்ள 219 குருப் 'சி'
பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. சமையலர்:
14 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 7). இவற்றில் 2 இடங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கும், ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கும்
ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
27.2.2015 தேதிப்படி 18 முதல் 25க்குள்.
தகுதி:
மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித் தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.
2. சிவிலியன் மோட்டார் டிரைவர்:
91 இடங்கள். (பொது - 48, ஒபிசி - 24, எஸ்சி - 14, எஸ்டி - 5). இவற்றில் 10 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
18 முதல் 25க்குள்.
தகுதி:
மெட்ரிகுலேசனுடன் கனரக வாகன மோட்டார் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.
3. முடி திருத்துநர்:
14 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 6, எஸ்டி - 1) இவற்றில்
மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் தலா ஒரு இடம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
வயது:
18 முதல் 25க்குள்.
தகுதி:
மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் முடிதிருத்துதலில் முன் அனுபவம்.
4. சலவையாளர்:
14 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 7). இவற்றில் தலா ஒரு இடம்
மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
வயது:
18 முதல் 40க்குள்.
தகுதி:
மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட
துறையில் முன் அனுபவம். இந்தி மற்றும் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.
5. செருப்பு தைப்பவர்/ சாதனங்கள் பழுதுபார்ப்பவர்:
14 இடங்கள். (பொது - 8, ஒபிசி - 5, எஸ்டி - 1). இவற்றில்
மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் தலா ஒரு இடம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
18 முதல் 25க்குள்.
தகுதி:
மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான தகுதியுடன் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
6. தையற்கலைஞர்:
14 இடங்கள். (பொது - 7, ஒபிசி - 7). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கும்,
முன்னாள் ராணுவத்தினருக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
வயது:
18 முதல் 30க்குள்.
தகுதி:
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியுடன் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.
7. பயர் இன்ஜின் டிரைவர்:
2 இடங்கள். (பொது - 1, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
21 முதல் 30க்குள்.
தகுதி:
எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி.
உடற்தகுதிகள்:
உயரம் - ஷூக்கள் அணியாமல்: 165 செ.மீ., மார்பளவு (சாதாரண நிலையில்): 81.5
செ.மீ., (விரிவடைந்த நிலையில்) 86 செ.மீ., எடை: குறைந்த பட்சம் 50 கிலோ.
8. பயர்மேன் நிலை - 2:
53 இடங்கள். (பொது - 27, ஒபிசி - 8, எஸ்சி - 10, எஸ்டி - 8). இவற்றில் 7
இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.
தகுதி:
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி.
உடற்தகுதி
உயரம்: (ஷூக்கள் இல்லாமல்): 165 செ.மீ., மார்பளவு (சாதாரண நிலையில்): 81.5 செ.மீ. விரிவடைந்த நிலையில் - 86 செ.மீ.,. எடை - 50 கிலோ.
வயது:
18 முதல் 25க்குள்.
9. டெலிபோன் ஆபரேட்டர் (நிலை - 3):
1 இடம். (பொது). இந்த இடம் மாற்றுத்திறனாளிக்கானது.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.
தகுதி:
மெட்ரிகுலேசன் மற்றும் பிபிஎக்ஸ் போர்டு கையாள தெரிந்திருக்க வேண்டும்.
வயது:
18 முதல் 25க்குள்.
10. நர்ஸ்/ சிவிலியன் சிஸ்டர்:
1 இடம். (ஒபிசி).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
தகுதி:
மெட்ரிகுலேசன் மற்றும் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியதற்கு சான்றிதழ் மற்றும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது:
18 முதல் 45க்குள்.
11. விடுதி கண்காணிப்பாளர்:
1 இடம். (பொது).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. பிளஸ் 2 மற்றும் விடுதி அல்லது உணவு விடுதியை நடத்தியதில் 5 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது:
18 முதல் 30க்குள்.
27.2.2015 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில்
எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மத்திய
அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சட்ட
விதிமுறைகளின்படியும் தளர்வு அளிக்கப்படும்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு
http://www.irfc-nausena.nic.in/modules.php?name=Content&pa=showpage&pid=751
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Flag Officer Commanding in Chief (for CRC),
Headquarters, Eastern Naval Command,
Arjun Block, 2nd Floor,
Navi Base,
Visakhapatnam 530 014.
விண்ணப்பிக்க கடைசி நாள்; 27.2.2015.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...