பதிவு எழுத்தர், ஆய்வக உதவியாளர்களுக்கு
இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்என பள்ளிக் கல்வித்துறை
நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மெளலானா மேல்நிலைப் பள்ளி
வளாகத்தில், இந்த சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவர் சி. நாகராஜன் தலைமை
வகித்தார். மாநில இணைச் செயலர் சு. சரவணசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி
பேசினார்.
கூட்டத்தில், பள்ளிகளில் வரையறுக்கப்படாத
காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட துப்புரவாளர்களுக்கு காலமுறை
ஊதியம் வழங்க வேண்டும். மக்கள்தொகைகணக்கெடுப்பில் நியமனம் பெற்ற
பணியாளர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட துணை மற்றும்
இணை இயக்குநர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.அனைத்து மாவட்ட
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கும் பர்சார் பணியிடங்கள் ஏற்படுத்த
வேண்டும்.கண்காணிப்பாளர் இல்லாத உதவிக் கல்வி அலுவலகங்களுக்கு
கண்காணிப்பாளர் பணியிடம் அளிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர்(கணக்குகள்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும். கருணை
அடிப்படையில் நியமனம் பெற்றவர்களுக்கு, உடனடியாக பணி வரன்முறை ஆணை அளிக்க
வேண்டும்.
பவானிசாகர் பயிற்சிக்காக காத்திருக்கும்
இளநிலை உதவியாளர்களுக்கு உடனடியாக பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட அமைப்புச் செயலர் கி.
கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர்
பி.எம். திருநாவுக்கரசு வரவேற்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...