தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் மாநில பொதுக்குழு
கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று
நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
தலைவர் த.ராமச்சந்திரன், பொருளாளர் எஸ்.ரெங்கநாதன், துணை பொதுச்செயலாளர்
தாகப்பிள்ளை, தலைமை நிலையச்செயலாளர் சட்டநாதன், மகளிர் அணி செயலாளர்
டி.வைஜெயந்திமாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஓய்வூதியம் பெறுவதற்கு தொகுப்பூதிய காலத்தை அரசு கணக்கிடவேண்டும்,
தொழில்கல்வி ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்போல தலைமை ஆசிரியராக
பதவி உயர்வு அளித்தல், ஒப்புதல் இன்றி பணிபுரிந்து வரும் தொழில்கல்வி
அலுவலர்களுக்கு ஒப்புதல் வழங்கி அடிப்படை ஊதியம் வழங்குதல், வெவ்வேறு
பாடங்களில் உயர்கல்வி கற்றவர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க ஆணை
பிறப்பித்தல், தொழில்கல்வி பாடங்களை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்க
வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொழில்கல்வி ஆசிரியர்களை நிரப்ப ஆணை
பிறப்பிக்கக்கோருகிறோம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்
நிறைவேற்றப்பட்டன.
தொழிற்கல்வி ஆசிரியர்கு வேலை போடுவாங்க
ReplyDelete