அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவிலான போட்டி, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், 3000 மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.பரிசளிப்பு விழாவிற்கு அமைச்சர் தியாகராஜன், தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு பரிசு வழங்கிமுதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும், துவக்க கல்வியில் முதலிடம்
பிடித்துள்ளது. மாநிலத்தில் உயர் கல்விக்கான உட்கட்டமைப்பு சிறப்பாக
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்கள் கூட எந்த செலவும் இல்லாமல் மருத்துவம் படிக்க முடியும் என்ற
சூழலை உருவாக்கியுள்ளோம்.இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக்
கொண்டு படிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் குறித்து
கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக
நிரப்பப்படும். உடற்கல்வி ஆசிரியர் காலியிடங்களை தகுதி வாய்ந்தவர்களை
கொண்டு நிரப்பவும் அரசு உத்தேசித்துள்ளது.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி
பேசினார்.பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் குமார் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
Is there 5% relaxation in pondy tet.
ReplyDelete