ஸ்மார்ட் போனில், இனி 'வாட்ஸ் அப்' மூலம் படங்கள், குறுந்தகவல்கள்
அனுப்புவதுடன், எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் செய்யலாம். ஸ்மார்ட்
போனில், அதிக கொள்ளளவு உள்ள படங்களையும், குறுந்தகவல்களையும் உடனுக்குடன்
மிக விரைவாக அனுப்ப, வாட்ஸ் அப் என்ற, செயலி உதவுகிறது.
இத்துடன், பேசும் வசதியையும் இணைக்க, நீண்ட காலமாக
முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, குறிப்பிட்ட சிலரிடம், சோதனை
அடிப்படையில், 'வாட்ஸ் அப்'பில் பேசும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது.
பொதுவான பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. இதுகுறித்து, 'வாட்ஸ் அப்'
நிறுவனம் சார்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும்,
நேற்று முதல் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள், 'வாட்ஸ் அப்'பில் பேசிக்
கொள்ளத் துவங்கியுள்ளனர். எனினும், ஆண்ட்ராய்டு ஆணைத் தொகுப்பில் இயங்கும்,
'வாட்ஸ் அப்' செயலி வைத்துள்ள அனைவரும், அதன் மூலம் நண்பர்களிடம் பேச
முடியாது. இதற்காக, 'வாட்ஸ் அப்' வலைதளத்தில் நுழைந்து, மேம்படுத்தப்பட்ட,
.apk என்ற பைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியே அதை பதிவிறக்கம்
செய்தாலும், பிறருடன் பேசுவதற்காக இணைய முடியாது. எதிர் தரப்பில்
பேசுபவரிடமும், அந்த பைல் இருந்தால் மட்டுமே பேசலாம். அவ்வாறின்றி,
நண்பருக்கு அந்த பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேசலாம்.கடந்த டிசம்பரில்,
இணையத்தில் போன் குறியீடு கொண்ட, 'வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்' திடீரென
அதிகாரபூர்வமற்ற வகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...