திருச்சியில்,
பிரதேச ராணுவ படைக்கான ஆள்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதற்கான
உடல் திறன் தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான
இளைஞர்கள் வந்து குவிந்தனர்.
உடல் திறன் தேர்வு
இந்திய ராணுவத்தின் பிரதேச ராணுவ படையில் சிப்பாய்(பொது), ஹவுஸ் கீப்பிங், சமையலர் ஆகிய பணிகளில் காலியாக உள்ள 22 இடங்களை நிரப்புவதற்காக ஆள் சேர்ப்பு முகாம் பிப்ரவரி 23–ந் தேதி திருச்சி மன்னார்புரம் ராணுவ பயிற்சி மைதானத்தில் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலையிலேயே இந்த மைதானத்திற்கு ஏராளமான இளைஞர்கள் வந்து குவிந்தனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, கோவா, டையு டாமன், லட்சத்தீவுகள், தாத்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து இருந்தனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு
முதலில் அவர்களது சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. திருச்சி பகுதி ராணுவ ஆள் சேர்ப்பு அதிகாரி கர்னல் எஸ்.கே.சர்மா மேற்பார்வையில் இந்த பணிகள் நடந்தன. இதனை தொடர்ந்து அவர்களது உடல் திறனை பரிசோதிப்பதற்காக 1000 மீட்டர் ஓட்டம், கம்பிகளில் தொங்கி ‘புல் அப்ஸ்‘ எடுக்கும் சோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றில் சரியான மதிப்பெண் எடுக்காதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
உரிய மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாக அடுத்த கட்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. வருகிற 28–ந் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...