மாணவர்கள் தோல்வியடையும் பாடங்களுக்கு, பல்கலை தேர்வு விதிகளை மீறி, உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லுாரிகளை கண்டித்து, சென்னை பல்கலை, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லுாரிகள்,
சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பல்கலை கட்டுப்பாட்டிற்குள்
வரும்.பொதுவானதுஇதில், தன்னாட்சி கல்லுாரிகள், தேர்வுக்குரிய கேள்வித்
தாள், பாடத்திட்டங்களை தாங்களே தயாரித்துக் கொள்ளும். மற்ற கல்லுாரிகளில்,
பல்கலை சார்பில் தேர்வு நடத்தப்படும். ஆனால், தேர்வுக்கான பல்கலையின்
விதிகள், அனைத்து கல்லுாரிகளுக்கும் பொதுவானது.
அனைத்து கல்லுாரிகளிலும், இளநிலை பட்டப்படிப்புக்கு, ஆறு பருவங்கள்;
முதுநிலைக்கு, நான்கு பருவங்கள் பின்பற்றப்படுகின்றன. அனைத்து
கல்லுாரிகளிலும், தேர்வுகள் முடிந்து, மதிப்பெண் பட்டியல், பல்கலைக்கு
வழங்கப்படும். அதை ஆய்வு செய்யும் பல்கலை தேர்வுத்துறை, மாணவர்களுக்கு,
புரொவிஷனல் சான்றிதழ் வழங்கும். தொடர்ந்து, அவர்களுக்கு பட்டம்
வழங்கப்படும்.
பல்கலை விதிப்படி, ஒரு மாணவர், ஐந்து பருவங்களிலும் அனைத்து பாடங்களிலும்
தேர்ச்சி பெற்று, ஆறாவது பருவத்தில், ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி
அடைந்தால், ஜூன் மாதத்தில், உடனடி தேர்வு நடத்தி, தேர்ச்சி சான்று
வழங்கலாம். சமீபத்தில், சென்னை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை
பகுதிகளில் உள்ள சில தன்னாட்சி கல்லுாரிகள் அளித்த, மதிப்பெண் பட்டியலை
ஆய்வு செய்த, சென்னை பல்கலை அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர். அந்த
கல்லுாரிகளில், ஆறு பருவங்களிலும், பல பாடங்களில் தோல்வியடைந்த
மாணவர்களுக்கு, உடனடி தேர்வு நடத்தி, மதிப்பெண் பட்டியல்
வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
விதிகளை மீறிய அந்த கல்லுாரிகளின் பிரதிநிதிகளை அழைத்து, சென்னை பல்கலை தன்
அதிருப்தியை தெரிவித்துள்ளது. அனைத்து கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை
அனுப்பி உள்ளது.
ஒரு பாடத்தில்..
அதில் கூறியிருப்பதாவது:
* இறுதி ஆண்டு முதுநிலை, இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், இறுதி
பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்திருந்தால், அப்பாடத்திற்கு
மட்டுமே, உடனடி தேர்வு நடத்த வேண்டும்.
* அந்த தேர்வு, ஆண்டு தோறும் ஜூன், ஜூலையில் மட்டுமே நடத்த வேண்டும்.
* இந்த ஆண்டு முதல், அனைத்து தன்னாட்சி கல்லுாரிகளும், உடனடி தேர்வு
குறித்த, பல்கலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...