மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை கழுவி உள்ளனரா என்பதை
ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. அதன்படி, மத்திய அரசின் மனிதவளத்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், மதிய உணவு திட்டம் செயல்பட்டு வரும் நாட்டில் உள்ள அனைத்து
துவக்கப்பள்ளிகளிலும், மாணவர்கள் சாப்பிடும் முன் கைகழுவுகின்றனரா என்பதை
ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல்,
உணவு வகைகள், சூடாக வைத்திருக்க வேண்டும் என்றும், பேக்கிங் செய்யப்பட்ட
பலசரக்கு சாமான்களை மட்டுமே, உணவு தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...