ஒளிவுமறைவின்றி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்டத்தலைவர்
கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.
கவுரவத்தலைவர் மணிகண்டன் பேசினார். மே மாதத்திற்குள் ஒளிவுமறைவின்றி
பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். 2010 ஆக., 23 க்கு பின்
தகுதித்தேர்வின்றி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதிகாண்
பருவம் வழங்கி உரிய பணபலன் வழங்க வேண்டும். அரசு நிதியுதவி பள்ளி
ஆசிரியர்களுக்கு 2007 க்கு பின் உயர்கல்வி பெற்றவர்களுக்கு பின்னேற்பு
அரசாணை வழங்க வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டு 5 மாதங்களாக ஊதியம் பெறதாக
பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி திண்டுக்கல்லில் மார்ச் 8 ல் ஊர்வலம் செல்வது உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...