தமிழகத்தில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை என சம கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் திருநெல்வேலி,
ராமநாதபுரம், சென்னை, ஈரோடு உள்பட 7 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி
மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக சமகல்வி
இயக்கத்தின் தலைவர் எம்.ஜெயம், பொதுச்செயலாளர் செல்ல.செல்வகுமார் ஆகியோர்
சென்னையில் வியாழக்கிழமை கூறியது:
அங்கன்வாடி மையங்களில் 68 சதவீதக்
குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை. அதேபோன்று, 65 சதவீத
குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்படுவதில்லை.
இந்த மையங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், முதலுதவிப் பெட்டிகள் போன்றவையும் இல்லை.
தமிழகத்தில் உள்ள 54 ஆயிரத்து 439
அங்கன்வாடி மையங்களில், 24 லட்சத்து 57 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இந்த
மையங்களில் நாளொன்றுக்கு ஒரு குழந்தைக்கு உணவுக்காக 54 பைசா ஒதுக்கீடு
செய்யப்படுகிறது.
இந்தத் தொகை அந்தக் குழந்தைகளுக்கு
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கப் போதுமானதாக இல்லை. எனவே, உணவுக்கான
நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அதேபோல், அங்கன்வாடி மையங்களில்
17,190 அமைப்பாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப்
பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துடன் கூடிய உணவு
வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். முன்பருவக் கல்வி, கழிப்பறை வசதிகள்
போன்றவற்றையும், இந்த மையங்கள் சரியாக இயங்குவதையும் கண்காணிக்க வேண்டும்
என்று அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...