Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தின குழு விளையாட்டு இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கி பாராட்டு.

           பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டு.


பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 நாட்கள் (04-02-2015,05-02-2015,06-02-2015) நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக 15 வகையான குழு விளையாட்டுப்போட்டிகள் மாநில அளவில் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் 17 மண்டலங்களில் இருந்து 510 குழுக்களாக வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினார்கள். போட்டிகள் முதல்சுற்று, கால்இறுதி, அரைஇறுதி, இறுதி சுற்று ஆகிய முறையில் நடைபெற்றது. 

ஆண்களுக்கான போட்டி

மௌண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்களுக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்திலும், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றது. ஏ.டி.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோ-கோ இறுதிப்போட்டியில் கோயம்புத்தூர் மண்டலம் முதலிடத்திலும், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. மௌண்ட்சீயோன் சி.பி.எஸ்.சி பள்ளியில் நடைபெற்ற எரிபந்து இறுதிப்போட்டியில் திருச்சி மண்டலம் முதலிடத்திலும், சேலம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றிபெற்றன. மோடிக்கிளப்பில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறகுபந்து இறுதி போட்டியில் கோயம்புத்தூர் மண்டலம் முதலிடத்திலும், தஞ்சாவூர் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. இரட்டையர் பிரிவு இறகு பந்து இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் மண்டலம் முதலிடத்திலும். ராமநாதபுரம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. மௌண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் மதுரை மண்டலம் முதலிடத்திலும், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஈரோடு மண்டலம் முதலிடத்திலும், வேலூர் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. ஆபிசர் கிளப்பில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இறுதிப்போட்டியில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்திலும். பெரம்பலூர் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. மன்னர் கல்லூரி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கபடி இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மண்டலம் முதலிடத்திலும், திருச்சி மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. ஸ்ரீஅருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஹாக்கி இறுதிப்போட்டியில் ஸ்போர்ட்ஸ் ஆஸ்டல் ரன்னர் முதலிடத்திலும், மதுரை மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. கந்தர்வக்கோட்டை வித்யாவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாலிபால் இறுதிபோட்டியில் ஸ்போர்ட்ஸ் கிளப் ரன்னர் முதலிடத்திலும். ஸ்போர்ட்ஸ் கிளப் வின்னர் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. கைப்பந்து இறுதிப்போட்டியில் திண்டுக்கல் மண்டலம் முதலிடத்திலும், கோயம்புத்தூர் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. குலபதி பாலையா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பூப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஈரோடு மண்டலம் முதலிடத்திலும், தஞ்சாவூர் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. மன்னர் கல்லூரி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கால்பந்து இறுதிப்போட்டியில் கடலூர் மண்டலம் முதலிடத்திலும், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. 

பெண்களுக்கான போட்டி

இலுப்பூர் மதர்தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான கபடி இறுதிப்போட்டியில் பெரம்பலூர் மண்டலம் முதலிடத்திலும், தஞ்சாவூர் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. கைப்பந்து இறுதிப்போட்டியில் ஈரோடு மண்டலம் முதலிடத்திலும், ஸ்போர்ட்ஸ் ஆஸ்டல் வின்னர் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. சிவபுரம் எம்.ஆர்.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோ-கோ இறுதிப்போட்டியில் ராமநாதபுரம் மண்டலம் முதலிடத்திலும், சேலம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. லேணாவிளக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வாலிபால் இறுதிப்போட்டியில் சேலம் மண்டலம் முதலிடத்திலும், ஸ்போர்ட்ஸ் ஆஸ்டல் வின்னர் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கால்பந்து இறுதிப்போட்டியில் சேலம் மண்டலம் முதலிடத்திலும், ஸ்போர்ட்ஸ் ஆஸ்டல் வின்னர் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. வேங்கடகுளம் தூய வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஹாக்கி இறுதிப்போட்டியில் ஈரோடு மண்டலம் முதலிடத்திலும், காஞ்சிபுரம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. லேணாவிளக்கு மௌண்ட்சீயோன் சி.பி.எஸ்.சி பள்ளியில் நடைபெற்ற எரிபந்து இறுதிப்போட்டியில் சென்னை மண்டலம் முதலிடத்திலும், ஈரோடு மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பூப்பந்து இறுதிப்போட்டியில் மதுரை மண்டலம் முதலிடத்திலும், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. பி.பி.சி கிளப்பில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறகுபந்து இறுதிப்போட்டியில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்திலும், மதுரை மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. இரட்டையர் பிரிவு இறகுபந்து இறுதிப்போட்டியில் ஸ்போர்ட்ஸ் ஆஸ்டல் முதலிடத்திலும், ராமநாதபுரம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. மௌண்ட்சீயோன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு டேபிள்டென்னிஸ் மதுரை மண்டலம் முதலிடத்திலும், ஈரோடு மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் மதுரை மண்டலம் முதலிடத்திலும். காஞ்சிபுரம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. எம்.ஆர்.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெரம்பலூர் மண்டலம் முதலிடத்திலும், கடலூர் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. இரட்டையர் பிரிவு டென்னிஸ் இறுதிப்போட்டியில் வேலூர் மண்டலம் முதலிடத்திலும், ராமநாதபுரம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கூடைப்பந்து இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் மண்டலம் முதலிடத்திலும், சேலம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றன. போட்டிகள் நடைபெற்றதை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் இ.ஆ.ப, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் முனைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டக்கல்வி அலுவலர்கள்(பொ) புதுக்கோட்டை திரு ப.மாணிக்கம், அறந்தாங்கி திரு. ஆர்.சண்முகம், மெட்ரிக்பள்ளிகளின் ஆய்வாளர் திரு உ.பரமசிவம், மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்(பொ) திருமதி அருமைக்கண்ணு,முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்(பொ) திரு மா.கலைச்செல்வன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொ) திரு ஆர்.தங்கராஜ்,ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் ஸ்ரீஅருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்காக நடைபெற்ற ஹாக்கி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி திரு பி.ரவி அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். அதனைத்தொடர்ந்து மன்னர் கல்லூரி விளையாட்டு அரங்கத்தில் ஆண்களுக்காக நடைபெற்ற கால்பந்து மற்றும் கபடிஇறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு புதுக்கோட்டைமாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் இ.ஆ.ப, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்(பொ) திரு மா.கலைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ்களையும். கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார்கள். இதேபோல இறுதிபோட்டிகள் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக முதல் நாள் நடைபெற்ற போட்டியினை பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், இணைஇயக்குநர்கள் திரு செ. கார்மேகம், திருமதி சி.உஷாராணி ஆகியோர் பார்வையிட்டனர்.

படவிளக்கம் 1 மற்றும்2 ஸ்ரீஅருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்காக நடைபெற்ற ஹாக்கி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி திரு பி.ரவி அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டியபோது எடுத்தபடம் படத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில பொதுசெயலாளர் திரு சாமி.சத்தியமூர்த்தி மற்றும் பலர் உள்ளனர் 

          படவிளக்கம் 3மன்னர் கல்லூரி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கால்பந்து இறுதிப்போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற கடலூர் மண்டல அணிக்கும், இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்ற சென்னை மண்டலஅணிக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவர்கள் கலந்துகொண்டு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கியபோது எடுத்தபடம். படத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன் மற்றும் பலர் உள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive