Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அதிர்வு; நாடு முழுவதும் வெகுண்டு எழுமா?

            டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது. இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர்.
 
               இன்றைய வெற்றி மூலம் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் இன்னும் அபரிதமாக இருக்குமோ என்றே எண்ண தோன்றுகிறது. இந்த கட்சி வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஹசாரே குழுவில் இருந்து விலகி, 2012 நவ., 26ல் "ஆம் ஆத்மி' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். டிச., 4ல் நடந்த டில்லி தேர்தலில் இவரது கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. 2013 டிச., 4ல் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களில் வென்று பா.ஜ.,வுக்கு (32), அடுத்ததாக 2வது பெரிய கட்சி என்ற சாதனை படைத்தது. காங்., கட்சி ஆதரவுடன் டிச., 26ல் டில்லி முதல்வராக பொறுப்பேற்றார். 49 நாள் ஆட்சி நடத்திய கெஜ்ரிவால் சட்டசபையில் லோக்பால் மசோதவை கொண்டு வந்தார். ஆனால் இதற்கு காங்., ஆதரவு அளிக்காததால், முதல்வர் பதவியை 2014 பிப்., 14ம் தேதி ராஜினாமா செய்தார். பின் இங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2015 பிப்., 7ல் நடந்த மீண்டும் தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு பூஜ்யம்: இன்றைய தேர்தல் முடிவில் காங்கிரஸ் பூஜ்யம். கடந்த முறை 31 தொகுதிகளை பிடித்த பா.ஜ.,வுக்கு இந்த முறை ஒற்றை இலக்கமான 3 தொகுதிகளே கிடைத்துள்ளது. ஆம் ஆத்மிக்கு கிடைத்த 95 சதவீத வெற்றி வரலாற்றில் பொறிக்கும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது. 

                ஹசாரேயிடம் அரசியல் பாடம் பயின்றவர் ; ஐ.ஆர்.எஸ்., படித்த ஒரு அதிகாரியாக இருந்து,அரசியலுக்கு வந்து ஏழை மக்களை மட்டுமே அரவணைத்தார் கெஜ்ரிவால். அன்னா ஹசாரேயிடம் அரசியல் பாடம் பயின்றார். அவரது ஆரம்ப அரசியலில், பொது விஷயங்களை முன்வைத்தே போராட்டம் நடத்தி வந்தார். தொகுதிகளின் அடிப்படை தேவைகள் குறித்த அக்கறை, ஜன்லோக்பால், ஊழல் ஒழிப்பு, சமூக நோக்கிலான திட்டம் என்பது இவரது குறிக்கோளாக இருந்தது. இதுவே இவரது அளப்பரிய வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. 

            ஆம் ஆத்மி ஒரு எச்சரிக்கை மணி : மேலும் டில்லி தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக 3 மாதங்களாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். இவரது பிரசாரத்தில் வேறு எந்தவொரு பிரச்னையும் தொடாமல் அடிப்படை தேவைகள் குறித்தே இவரது பிரசாரம் இருந்தது. இதுவே இவரது வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. 

                  இன்றைய தேர்தல் வெற்றி மூலம் நாடு முழுவதும் அந்த அதிர்வு பரவி , இது போல் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அலை தற்போது எழுந்திருக்கிறது. மாநில வாரியாக ஊழல் செய்தவர்களே, ஆட்சி கட்டிலை பரபரம்பரை, பரம்பரையாக சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு ஆம் ஆத்மி ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றே கூறலாம். கெஜ்ரிவால் தலைநகரில் ஆட்சியை பிடித்து இருப்பதால், பிற மாநில அரசியல் கட்சிகளும் இவரது ஆதரவு, தயவை நாடி நிற்கும். இதன் மூலம் அரசியல் உறவுகளை புதுப்பித்து கொள்ளும். இதனால் உதிரி கட்சிகள் பல ஆம் ஆத்மியில் கூட்டு சேர தனது ஆதரவு கரத்தை நீட்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற சூழலை ஆம் ஆத்மி உருவாக்கியுள்ளது. 

                   தமிழகத்தில் ஊழலில் திளைத்த கட்சிகள்: தமிழகத்திலும் கடந்த 40 ஆண்டு காலமாக ஊழலில் ஊறிப்போனவர்களே ஆட்சி கட்டிலில் இருந்து வந்துள்ளனர். சோடா விற்றவன் முதல் தெருவோரம் வேலை இல்லாமல் திரிந்தவர்கள் எல்லாம் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு சுமோ கார்களில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. பலரும் கோடிகளில் புரள்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது படித்த இளைஞர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்ற கேள்வி கெஜ்ரிவால் வெற்றி மூலம் எழுகிறது. இந்த விழிப்புணர்வு அதிகரிக்கும் போது அரசியல் இன்னும் தூய்மை அடைய வாய்ப்பு இருக்கிறது. சரியான தலைமை, நேர்மையான பார்வைகள் என்பது புதிய இளைஞர்கள் அரசியலுக்கு உயிர்மூச்சாக இருக்க வேண்டும் என்பதே அவா.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive