Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை - ஆசிரியர் சங்கம் கோரிக்கை


 
         திண்டுக்கல் மாவட்டம் VGS Meeting Hall இரண்டாவது தளத்தில் இன்று 7.5.2015 நடைபெற்ற அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் குறித்தும் அதனை நிறைவேற்ற ஆசிரியப்பயிற்றுநர்கள் ஒன்று சேர்ந்து போராடக்கூடிய வழிமுறைகள், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 
கோரிக்கைகள் : 
1.உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கல்வித்துறைக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும்.
2.நடப்பாண்டுக்குரிய 500 ஆசிரியப்பயிற்றுநர்களையும் பள்ளிக்கல்வித்துறைக்கு பணி மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.பணியிடங்கள் இல்லை என்று கூறிவிட்டு, ஆசிரியப்பயிற்றுநர்களை கட்டாய மாறுதல் செய்த பின், மீண்டும் பேப்பர் டிரான்ஸ்பர் என்ற நடைமுறையில் அதே பணியிடங்களுக்கு மூத்த ஆசிரியப்பயிற்றுநர்களை மாவட்டம்விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்தததை இரத்து செய்ய வேண்டும்.
4.ஆசிரியப்பயிற்றுநர்கள் விடுப்பு எடுத்தல், FTA வழங்குதல் மற்றும் பணிப் பதிவேடு பராமரித்தல் ஆகிய செயல்பாடுகளை மாநிலம் முழுமைக்கும் ஒரே நடைமுறையினை பின்பற்றி செயல்படுத்த வேண்டும்.
5.ஆசிரியப்பயிற்றுநர்களை மூன்றாண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றக்கூடாது என்று மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்தததை திரும்பப்பெற வேண்டும்.
6.ஜீன்2014-ல் விருப்ப மாறுதல்என்ற பெயரில் வெளிமாவட்டங்களுக்கு கட்டாய பணிமாறுதலில் அனுப்பப்பட்ட ஆசிரியப்பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இப்படிக்கு
அ.சுதாகர், மாவட்டத்தலைவர், 
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்,
திண்டுக்கல் மாவட்டம்.









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive