அரசு பள்ளிகளில், கலையாசிரியர்களாக பணிநியமனம் பெறுவதற்கான முக்கிய
தேர்வாக கருதப்பட்ட தொழில்நுட்ப தேர்வுகள் நடந்து முடிந்து, ஒன்பது
மாதங்கள் முடிந்தும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
தமிழக அரசு தேர்வுத்துறை சார்பில், 2014 மே மாதம் தொழில்நுட்ப தேர்வுகள்
நடத்தப்பட்டது. இத்தேர்வுகளை மாநிலம் முழுவதும், 48 ஆயிரத்து 567 பேர்
எழுதினர். கோவை மாவட்டத்தில், 3,205 பேர் எழுதினர். ஒன்பது மாதங்கள்
கடந்தும் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை.தற்போது, கலையாசிரியர்கள்
பணிநியமனத்தில் போட்டித்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில்,
தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் பரிசீலிக்கப்படுமா, என்ற சந்தேகம்
கிளம்பியுள்ளது. ஆனால், அரசுத்தேர்வுத்துறை இதுகுறித்து எவ்வித
தகவல்களையும் வெளியிடாமல் தயக்கம் காண்பித்து வருகின்றது.
தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''
பிற தேர்வுகள் போன்று, கலையாசிரியர்களுக்கான தேர்வுகளுக்கும்
மதிப்பளிக்கவேண்டும். பெயரளவில் நடத்தி, தேர்வர்களை குழப்புவது சரியல்ல.
கலையாசிரியர் பணிநியமனம் தொடர்பாக தெளிவான பதில்கலை அரசு தேர்வுத்துறை
அறிவிப்பதுடன், நடத்தி முடிக்கப்பட்ட தொழில்நுட்ப தேர்வு முடிவுகளை
உடனடியாக, வெளியிடவேண்டும், '' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...