மைக்ரோசாப்ட்
நிறுவனம் 2 புதிய ரக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த
விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இவை
அறிமுகப்படுத்தப்பட்டுள் ளதாக நிறுவனத்தின் தென் பிராந்திய இயக்குநர்
டி.எஸ். ஸ்ரீதர் தெரிவித்தார்.
5
மெகாபிக்ஸெல் கேமரா, சிறப்பான வடிவமைப்பு, கிளான்ஸ் திரை, முன்புற கேமரா, 1
ஜிபி ரேம் மற்றும் கூடுதல் நினைவகம் உள்ளிட்ட வசதிகள் லூமியா 532
ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாகும். மிகச் சிறந்த ஹார்ட்வேர் மற்றும் புதிய
சிறப்பு வாய்ந்த சாப்ட்வேர் ஆகியன இவற்றின் கூடுதல் சிறப்பம்சங்களாகும்.
சமீபத்தில் வெளியான விண்டோஸ் 8.1 இயங்கு தளத்தைக் கொண்டதாகவும் லூமியா
டெனிம் வந்துள்ளது.
லூமியா 435 ரக
ஸ்மார்ட்போன் லூமியா விண்டோஸ் ஸ்மார்ட்போன் செயல்பாட்டு அனுபவத்தை
அளிக்கும். லூமியா 435 இப்போது மிகச் சிறந்த விலையில் அதாவது ரூ.
5,999-க்கும் லூமியா 532 ரக ஸ்மார்ட்போன் ரூ. 6,499 விலையிலும் வெளியிடப்
பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்விரண்டு
ஸ்மார்ட்போன் களும் இம்மாதம் 20-ம் தேதி முதல் அனைத்து விற்பனை யகங்களிலும்
கிடைக்கும். புதிய லூமியா 532 மற்றும் லூமியா 435 ஆகிய இரண்டுமே
வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை குறைவாக
இருந்தாலும் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்று ஸ்ரீதர்
குறிப்பிட்டார். இந்த இரண்டு வகையான ஸ்மார்ட்போன்களை வாங்கும்
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கூடுதலாகக் கிடைக்கும் என்று அவர்
குறிப்பிட்டார். 2 மாதத்துக்கு இலவசஏர்டெல் சந்தா, 500 எம்பி டேட்டா
பேக்குடன் வழங்கப்படும். ரெட்பஸ் ஆப்ஸை டவுன்லோட் செய்து ரூ. 1,500
மதிப்புள்ள டிக்கெட் கூப்பன்களை பெறலாம். பேடிஎம் செல்போன் சார்ஜ் சேவை
மையம் ரூ. 750 கேஷ்பேக் ரீசார்ஜ் சலுகையை அளிக்கிறது. அத்துடன் ட்ரூகாலர்
வசதியை 6 மாத காலம் பெறலாம்.
இவை அடர் பச்சை, அடர் ஆரஞ்சு, வெள்ளை, கறுப்பு வண்ணங்களில் ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம்களைக் கொண்டதாக வெளிவந்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...