கல்விச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக் கல்வி
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்ககம் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளில் இருந்தும்
கல்விச் சுற்றுலா செல்லும் முன்பாக மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் உரிய முன் அனுமதியைக் கண்டிப்பாகப் பெற
வேண்டும்.
இத்தகைய அனுமதி பெற்ற பிறகே கல்விச் சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
சுற்றுலா அழைத்துச் செல்லும்போது நீர்நிலைகள் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
சுற்றுலாவுக்கு பெற்றோரின் அனுமதி அவசியம். பெற்றோரின் அனுமதி பெறும்போது
அவர்களின் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலைப் பெற வேண்டும். பாதுகாப்பில்லாத
சுற்றுலாவில் குழந்தைகளுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அந்த நிகழ்வு
அந்தப் பள்ளியை மட்டுமின்றி, கல்வித் துறையையே பாதிக்கிறது.
எனவே, அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் இதுதொடர்பாக மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த
வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...