Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு 'நோ டிப்ஸ்!' எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை

           சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும்போது பணம் கொடுக்க தேவையில்லை; கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம்' என, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
      சமையல் காஸ் நேரடி மானியம் திட்டம், ஜனவரி முதல் தேதியிலிருந்து நாடு, முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் முழு தொகையை கொடுத்து, சிலிண்டரை பெற வேண்டும். மானியம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், காஸ் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், கட்டாயப்படுத்தி, பணம் வசூலிப்பதாக, தொடர் புகார் வருகிறது.வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, 10 முதல், 20 ரூபாய் கொடுத்தால், டெலிவரி செய்யும் ஊழியர்கள் வாங்கி செல்வர். ஆனால், தற்போது, சிலர், 50 ரூபாய் வரை டிமாண்ட் செய்வதோடு, 'டிப்ஸ் கொடுத்தால் தான் சிலிண்டர் வழங்குவோம்' என கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. தரை தளத்தில் உள்ள வீடுகளாக இருந்தால், 30 ரூபாயும் அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தால், 50 ரூபாயும் கட்டாயம் தர வேண்டும் என, பேரம் பேசப்படுகிறது.
 
          'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' கோவை ஏரியா மேலாளர் பிரவீன் நாயர் கூறியதாவது: காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்களுக்கு, 'டிப்ஸ்' எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அவர்களுக்கு வினியோகஸ்தர்கள், சம்பளம் வழங்குகின்றனர். வாடிக்கையாளர்களே முன்வந்து கொடுப்பது அவர்களது விருப்பம். ஆனால், 30, 40, 50 ரூபாய் என்று நிர்ணயம் செய்து கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவது தவறு. இதை அனுமதிக்க கூடாது. பில்லில் குறிப்பிட்டுள்ள, 707 ரூபாயை மட்டும் கொடுத்தால் போதும்; கட்டாயப்படுத்தி பணம் கேட்டால், சமையல் காஸ் ஏஜென்சியின் பெயர், ஏரியா, குறித்த விபரங்களை போனிலோ, எழுத்து பூர்வமாகவோ தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர், தங்களது பெயர் விபரங்களை கூற வேண்டும். அப்போதுதான் தவறு செய்த ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க முடியும்.
 
          பீளமேட்டில் பாரத்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஏரியா மேலாளர் அலுவலகம் செயல்படுகிறது. காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை அலுவலக நேரத்தில், பொதுமக்கள் நேரிலும், எழுத்து மூலமாகவும் புகார் கொடுக்கலாம்.இது தவிர, 0422-2534336 என்ற இலவச டெலிபோன் எண் வாயிலாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். புகாரின் அடிப்படையில், அந்த சமையல் காஸ் ஏஜென்சி மீதும், ஊழியர்கள் மீதும் நடவடிக்கை , எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
 
           'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' அதிகாரிகள் கூறுகையில்,'பில்லில் குறிப்பிட்டுள்ள, 707 ரூபாயை மட்டும் வாடிக்கையாளர் கொடுத்தால் போதும். அதிகபட்சத்தொகையை கேட்டால், அவிநாசி ரேட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாடிக்கையாளர் சேவை மையத்தை, 0422 2247396 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive