Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்கள் மாணவர்களுக்கு காதலிக்க கற்றுக்கொடுங்கள்! - பாடசாலையின் சிறப்புக்கட்டுரை!

Image result for காதலர் தினம்
நிகழ்ச்சி 1 - 9 ஆம் வகுப்பு-
மாணவன் 1- வணக்கம் சார். உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லனும்.
நாம்- சொல்லுப்பா!
மாணவன் 1- அந்த பையன் (மாணவன் 2) 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பொம்பளை புள்ளைய லவ் பண்றான் சார்.
மாணவன் 2- (அழுதபடியே) இல்ல சார்... அந்த புள்ளை தான் என்னை பார்க்கும் போதெல்லாம் சிரிச்சது சார். அத இவனுங்க தான் லவ்வுன்னு சொல்லிட்டாங்க சார்.

நாம்- தம்பி இதெல்லாம் இந்த வயதில் சகஜம்பா. மனிதன்னா இதெல்லாம் தாண்டி தான் வரனும். அவங்களே அவ சிரிக்கிறா! இவ உன்னை பார்த்து, பார்த்து வெக்கப்படறா! அப்படில்லாம் சொல்லி உசுப்பேத்திட்டு - அவன் தான் உன்னை முதல்ல வாத்தியார்களிடமும், உன் அப்பா அம்மா கிட்டேயும் மாட்டி விட்டு உனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவான். அதனால இதையெல்லாம் பற்றி கவலைப்படாதே! ”இந்த வயதில்-இதெல்லாம் கெட்ட செயல், நான் அத்தகைய கீழ்தரமான செயல்களை செய்யமாட்டேன், நான் நல்லவன்” அப்படின்னு முதல்ல நீ உன்னை பற்றி நம்பு. மற்றது தானாகவே மாறும்.
மாணவன் 2- நீங்க என்னை திட்டுவீங்களோன்னு பயந்துட்டேன் சார்! இனி ”நான் நல்லவன்னு” நான் மட்டும் இல்ல, என் பிரன்ட்சும் நம்புற மாதிரி தான் என் நடவடிக்கை இருக்கும் சார்.
நாம் - வாழ்த்துக்கள் தம்பி.

மேலே நாம் விவரித்தவை ஏதோ நாடக பாணியில் உள்ளதாக கருதவேண்டாம். நடந்தவற்றை மிக சுருக்கமாக இங்கு வழங்கியுள்ளோம்.

பாடசாலையின் வாசக ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்-

          ”பிப்ரவரி 14” அன்று காதலர் தினம் வர இருக்கிறது. இது குறித்து தாங்கள் அறிவீர்களோ, இல்லையோ - தங்கள் மாணவர்கள் அனைவரும் அறிவர். காதல் குறித்த விழிப்புணர்வு இல்லாத மாணவ பருவத்தில் எதிர் பாலின ஆண்கள் கொண்டுவரும் ”விலை உயர்ந்த அலைபேசியோ, சுடிதாரோ அல்லது சாக்லெட்டோ, அன்றைய தினம் அழைத்து செல்லப்படும் சுற்றுலா தளமோ, சினிமா படமோ” - எதற்கும் ஆசைப்பட்டு ஓரிரு வார்த்தைகள் பேசினால் அது அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என உங்கள் வகுப்பு மாணவிகளுக்கு உணர்த்துங்கள்!


Image result for acid attack
            அறியாத வயதில் மாணவிகள் ””தங்களை சுற்றி வரக்கூடிய வேலை வெட்டி இல்லாதவர்களையோ, பரீட்சைகளில் தேர்ச்சி பெறாமல் சும்மா சுற்றுபவர்களையோ பார்த்து ஆசைப்படலாம். மேலும் படித்து ஓரளவு தெளிவு பெற்ற பிறகு ”இது அவசியமற்ற செயல், தங்களுக்கு பொருத்தமானவன் இவன் இல்லை” என உணர்ந்து ஒதுங்கினால் கூட, வயது குறைந்த பெண்களை வசியம் செய்யக்கூடிய இவர்களில் ஒருசிலர் அப்பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பர். அப்படியும் தங்களை ஏற்றுக்கொள்ள வில்லை எனில் அவர்களின் வாழ்க்கையை சிதைக்கும் பொருட்டு ”ஆசிட் வீச்சு” சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்”” - என்பதை சுட்டிக்காட்டவும். இதெற்கெல்லாம் காரணம் அறியாத வயதில் அவசரப்பட்டு அவர்களிடம் ஒரு சில தினங்கள் ஒதுங்கி நின்று பேசியது தான் என்றும், அவர்கள் தரக்கூடிய அல்ப பொருட்களுக்கு ஆசைப்பட்டதும் தான் என அவர்களுக்கு புரிய வையுங்கள்!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை-
(இப்படங்களை அவசியம் வகுப்பு மாணவிகளிடம் காட்டவும்)
Image result for acid attack Image result for acid attack   Image result for acid attack

             காதலிப்பது தவறல்ல! ஆனால் அவை தங்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய உரிய வயதில்  அறிவு முதிர்ச்சியுடன் இருக்கும்போது காதலியுங்கள். குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது மல்லாந்து கூட படுக்காமல், ஒருக்களித்தவாறே படுத்து தங்களை பெற்றெடுத்த தாயும், தங்களை மார் மீதும், தோள் மீதும் தூக்கி சுமந்து வளர்த்த தந்தையும் ”நாங்கள் கூட இதைவிட சிறந்த வாழ்க்கை துணையை என் மகளுக்கு(அல்லது) மகனுக்கு பார்த்திருக்க முடியாது. அவ்வளவு பொருத்தமான வரன்” எனும்படி, ஊரார் மெச்சும்படி தங்கள் குணத்திற்கு ஏற்றவரை பொறுமையாக தேர்ந்தெடுத்து, தங்கள் பெற்றோர் சம்மத்துடன் தங்கள் வாழ்க்கை துணையை அமைத்துக்கொள்வதே சிறப்பானது! - என புரிய வையுங்கள்.

                காதலிக்கும் வயதை கடந்து வந்த நம்மை தவிர, வேறு யார் நமது மாணவர்களுக்கு ”காதல்” குறித்து முழுமையான தெளிவை ஏற்படுத்த இயலும். முயற்சிப்போம்!

நன்றி!
அன்புடன் - பாடசாலை.
             
(வாசகர்கள் - இக்கட்டுரை குறித்த தங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவிடவும்)





17 Comments:

  1. Its a useful article. I am the first follower . I am glad to tell this.

    ReplyDelete
  2. Wishes sir I try my best

    ReplyDelete
    Replies
    1. காதலர் தினம் இன்று தீபாவளியை விட பெரிய விழாவாகி விட்டது. 10 வயதிலேயே ஊடகம் குழந்தைப் பருவத்தை வெம்பிட செய்து விடுகிறது. காதல் காதல் இல்லையேல் சாதல் சாதல் என்று ஆர்வ பொருளாக இருதது ஓ! அதுதானே என்று சலித்து போனது போலாயிற்று. காதல் மரணங்கள் இப்பொழுதெல்லாம் குறைந்து விட்டது. மாணாக்கர் நம்மிடம் தம் உள்ள உணர்வினை கூறும் தயக்கமில்லா தன்மையை ஏற்படுத்தி எப்படி எடுத்துக் கொள்வது, எப்படி செயல்படுவது, எப்படி மாறிக் கொள்வது என்பதை அம் மாணாக்கர் ஏற்று கொள்ளுக் வகையில் கூறுதலே நலம். குறிப்பாக வேண்டாம் என்று சொல்வதே காத‌லின் வளர்ச்சி. செய் என்று சொல்லிப் பாருங்கள் காதல் சாகசங்கள் இல்லாமலே போய்விடும். காதலை மறக்க வேண்டுமா ? காதலின் இனிமைக்குள் உள்ள விஷத்தையும் மருந்தாக ஊட்டுங்கள். காதல் தானே, தாய் தந்தை உடன்பிறதோரிடம், ஆசிரியரிடம் உறவிடம் கூச்சமற்று பேசும் பக்குவம் வந்துவிடும். செய்யாதே என்பதை விட்டுவிட்டு இப்படி செய என்று கூறுங்கள் நம் மாணாகர் வாழ்வி நிர்ணயித்ட்துக் கொள்வான்.

      Delete
    2. காதலின் இனிமைக்குள் உள்ள விஷத்தையும் மருந்தாக ஊட்டுங்கள்.

      செய் என்று சொல்லிப் பாருங்கள் காதல் சாகசங்கள் இல்லாமலே போய்விடும்.

      Nice Words. Thank you sir,

      Delete
  3. காலை வணக்கம் அட்மின்.தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் நெருடலாக இருந்தது,பிறகு உள்ளே வந்ததும் உண்மை புரிந்தது அட்மின்.இப்போதுள்ள சூழ்நிலையில் ஆறாம் வகுப்பு மாணவி கூட குழந்தை பெற்றுக்கொள்ளும் அவல நிலையை செய்தியாக படிக்கும்
    போது மனதுக்கு கஷ்டமாக தான் இருந்தது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு சமூக அக்கறையோடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரை ஒன்றைவெளியிட்டதற்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் அட்மின்.
    அறியாத வயதில் வரும் காதலால் ஏற்படும் விபரீதவிளைவுகளையு,
    பெற்றோரின் தியாகத்தையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்,மேலும் காதலர் தினமென்றால்அது இளவட்டங்களுக்கு உரியது நமக்கென்ன என்று ஒதுங்கிப்போகாமலும்,காதலர் தினமா?ச்சீ....என்று முகம் சுளிக்காமலும் அதிலுள்ள தீமைகளை அலசி ஆராய்ந்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள்,You are Great Admin,நிச்சயம் முயற்சிக்கிறோம் நன்றி அட்மின்.

    ReplyDelete
    Replies
    1. பாடசாலை வாசகிக்கு வணக்கம்.

      ”இந்த வயதில் காதலிக்க வேண்டாம்” என தலைப்பு வைத்தாலே - இது ஏதோ அறிவுரை கூறும் மற்றும் ஒரு கட்டுரை என வாசகர்கள் பலரும் படிக்காமலே கடந்து செல்ல வாய்ப்புண்டு.

      மேலும் ”செய் என்று சொல்லிப் பாருங்கள் காதல் சாகசங்கள் இல்லாமலே போய்விடும்.” என்பதற்கேற்பவே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. தாங்களும் இதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக கூறியுள்ளதற்கு நன்றி!

      Delete
  4. அட்மின் ஸார் வணக்கம்....

    காதல் இல்லாத நகரம்
    அது காற்று இல்லாத நரகம்...
    என வைரவரிகளால் வைரமுத்து எழுதி விட்டார் ஆனால் காதல் என்னும் புனிதமான காற்றோடு ஜாதி,மதம்,காமம்,இச்சை,என கார்பன் -டை-ஆக்ஸைடு போன்ற நச்சு பொருள் கலந்து இச்சமூகமும் காதலும் சீர்கெட்டுவிட்டது...

    Love, ஊர்சுற்றுவது,ஆபாச உடை அணிவது,மெரினாவில் கடலை விதைப்பது,சினிமா தியேட்டர் செல்வது,எல்லை மீறுவது இது அனைத்தும் தவறு என்பதை மாணவ மணிகளுக்கு புரிய வைப்பது நம் கடமை....

    சிறு வயதுக்காதல் செல்லாத காசு என்பதை தெளிவுபடுத்தியதற்கும், இந்த கட்டுரையை தயங்காமல் வெளியிட்ட உண்க்களையும் வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. சிறு வயது நினைவுகள் அருமையான நினைவுபெட்டகம். அவற்றை நினைத்து பார்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் அவை எல்லை மீறும் போது வாழ்வையே சீரழித்துவிடும்.

      பாடசாலை ”தனித்தன்மையான கொள்கைகளோடு உண்மைக்கு மிக நெருக்கத்தில்” கட்டுரைகளை நடுநிலையோடு எப்போதும் வெளியிடும்.

      நன்றி!
      அன்புடன் - பாடசாலை.

      Delete
  5. Good article. keep it up

    ReplyDelete
  6. தற்பொழுது நடைபெற்ற PG TRB (2014-2015) தேர்வில் விலங்கியல் பாடத்தில் முதலில் வெளீயிட்ட விடையில் 100 மதிப்பெண் வந்தது, பிறகு வெளீயிட்ட விடையில் 98 மதிப்பெண் வந்தது இதனால் எனது வாய்ப்பு இழக்கப்பட்டு உள்ளேன், அது மட்டுமல்லாமல் வினாவில் எட்டு வினாவிற்க்கு இரண்டு விடையும், இரண்டு வினாவிற்க்கு புள்ளியும் (STAR) கொடுக்கப்பட்டுள்ளது, அதனால் COURT க்கு செல்ல உள்ளேன் யரெனும் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் CELL: 9095345653

    ReplyDelete
  7. What happened the tet 5% relaxation case at supreme court? can anybody help me?

    ReplyDelete
  8. That case is sleeping.....

    ReplyDelete
  9. Padasalai frnds and admin intha cps schemla govt. Tharum contribuition a kalaikalama kudatha... sollunga wata app la neraya per doupt kekranga thelive illa

    ReplyDelete
    Replies
    1. கழிக்கலாம் நண்பரே.

      Delete
  10. Cinema la endru school padikkura pasanga love pandrathu correct nu sollama irukkano annaiku intha love varathu...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive