மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், கழிவறைகள் கட்ட, ஈரோடு
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தாட்கோ திட்டத்தின் மூலம் ரூ.1.79 கோடி நிதி
ஒதுக்கபட்டுள்ளது.இதுகுறித்து கோவை தாட்கோ திட்ட உதவி பொறியாளர் பாட்ஷா
கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்,
குடிநீர் தொட்டி அமைத்தல், கழிவறை கட்ட தாட்கோ திட்டம் மூலம், ரூ.58 கோடி
நிதியை அரசு நடப்பாண்டில் ஒதுக்கி உள்ளது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட
பள்ளிகளுக்கு, ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.மாவட்டத்தில் மலை மற்றும்
வனத்தை ஒட்டியுள்ள பர்கூர், ஆசனூர், தலமலை, பெஜலட்டி, குத்தியாலத்தூர்,
கெத்தேசால், நகலூர், கொங்காடை, கிளத்தடி சோளகா, குட்டையூர், கத்திரிமலை,
காக்காயனூர், சோளக்கனை, பத்திரிபடகு, காணக்கரையில் அமைந்துள்ள பள்ளிகளில்
சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி வசதி, கழிவறை கட்டமைப்பு வசதிகள் கட்ட நிதி
ஒதுக்கபட்டுள்ளது.எந்தெந்த பள்ளிகளுக்கு எந்த மாதிரியான அடிப்படை வசதிகள்
தேவை என்பது குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. இப்பணி முடிந்தவுடன் ஓரிரு
மாதங்களில் முறைப்படி டெண்டர் விடப்படும். அதன்படி கட்டுமான பணி துவங்கி
நடக்கும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...