இந்திய வனப் பணி தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.),
சேலம் மாணவி எஸ்.எம்.ப்ரீத்தா அகில இந்திய அளவில் 8-ஆம் இடம் பிடித்து
சிறப்புச் சேர்த்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(யு.பி.எஸ்.சி.) சார்பில், இந்திய வனப் பணிக்கான (ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத்
தேர்வு 2014, ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2014, நவம்பரில்
முதன்மைத் தேர்வும், 2015, பிப்ரவரியில் நேர்காணலும் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்திய வனப் பணி இறுதித்
தேர்வு முடிவுகள் புதன்கிழமை (பிப்.18) வெளியாயின. இதில், அகில இந்திய
அளவில் 85 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த
எஸ்.எம்.ப்ரீத்தா அகில இந்திய அளவில் 8-ஆம் இடமும், மாநில அளவில்
முதலிடமும் பிடித்து சிறப்புச் சேர்த்துள்ளார்.
இதுதொடர்பாக, எஸ்.எம்.ப்ரீத்தா கூறியதாவது:
நான் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.
தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக். (ஐ.டி.) படித்தேன். 2012-இல் படிப்பை
முடித்ததும், ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வந்தேன்.
2013-இல் சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வில்
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற
முடியவில்லை. இந்த நிலையில், இரண்டாவது முறையாக முயற்சித்து அகில இந்திய
அளவில் 8-ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய வனப் பணியில் சிறப்பாகவும், நேர்மையாகவும் திறம்பட பணியாற்றுவேன் என்றார்.
சேலம் மாணவி...: சேலம் அழகாபுரம் பி.என்.டி.
காலனி அழகு விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.எம்.ப்ரீத்தா. இவரது தந்தை
முருகேசன், நீலகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் உதவிப் பொது மேலாளராகப்
பணியாற்றி வருகிறார். தாய் நர்மதா, சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியராக
உள்ளார்.
வாழ்த்துக்கள்
ReplyDelete