இதுகுறித்து ராணுவ பொதுத் துறை செயலகம் நேற்று வெளி யிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: இந்திய ராணுவ பயிற்சி கல் லூரியில்
2016 ஜனவரி கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர்களிடமிருந்து விண்ணப்
பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் மாணவர்களின் வயது
பதினொன்றரையிலிருந்து இருந்து பதிமூன்றுக்குள் (1.1.2016 நாளன்று) இருக்க
வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை The Commandant, RIMC Dehradun 248 003,
Uttarakhand state என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பதிவு தபால் மூலம் விண்ணப்பத்தை பெற கட்டணம் ரூ.430. எஸ்.சி, எஸ்.டி
பிரிவினருக்கு கட்டணம் ரூ.385. விரைவு தபால் மூலம் விண்ணப்பத்தை பெற
கட்டணம் ரூ.480. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் ரூ.435. வரும்
மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்வு கட்டுப்பாட்டாளர் டிஎன்பிஎஸ்சி சென்னை-3
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு
வரும் ஜூன் மாதம் 1, 2-ம் தேதிகளில் நடக்கிறது. ஆங்கிலம் பாடத்தில் 125
மதிப்பெண்கள், கணிதத்தில் 200 மதிப்பெண்கள், பொது அறிவு பாடத்தில் இருந்து
75 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதுகுறித்து மேலும் தகவல்களை
பெற www.rimc.gov.in என்ற இணைதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...