கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
தேர்வு செய்யப்படும்
சிறந்த பள்ளிகளுக்கு, இத்தொகை பரிசு தொகையாக
பகிர்ந்தளிக்கப்படும்.மாவட்டத்துக்கு 4 பள்ளிகள் வீதம், மாநிலம் முழுவதும்
சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளன. மேல்நிலைப் பள்ளிக்கு, 1 லட்சம்
ரூபாய், உயர்நிலைப் பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிக்கு, 50
ஆயிரம் ரூபாய், துவக்கப் பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை
வழங்கப்படும்.அதற்காக, சிறந்த பள்ளிகளின் பெயர் பட்டியலை தேர்வுசெய்து
அனுப்புமாறு, அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கலெக்டர் தலைமையில்
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட தேர்வுக்குழு, சிறந்த பள்ளிகளைதேர்வு
செய்து, வரும் 16க்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்கட்டமைப்பு
வசதியை மேம்படுத்த, பரிசுத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற பள்ளிகள்,
எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., ஒதுக்கும் நிதியை பயன்படுத்தி, கல்வி
வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடுமாறு, பள்ளி கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...