தமிழ்நாட்டில்
உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் கமிட்டி
அமைக்கப்பட்டு குழு பரிந்துரைத்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அதைவிட
கூடுதலாக ஒரு சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்டணம் வசூலித்தன. அரசு
நிர்ணயித்ததை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும் குவிந்தன.
மாணவர்களிடம்
அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் இதுவரை ரூ.46 லட்சத்து 19 ஆயிரத்து 250
திரும்ப கொடுத்துள்ளது. இன்னும் ரூ.7 கோடியே 16 லட்சத்து 58 ஆயிரம் பணம்
பள்ளிகள் பெற்றோருக்கு திரும்ப தர வேண்டியுள்ளது.
இந்த பணத்தை பெற்றோருக்கு திருப்பி கொடுக்க சிங்காரவேலு கமிட்டி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளது.
எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு தொகை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் இயக்குனருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுபற்றி
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சையிடம் கேட்டதற்கு, இன்னும்
இதுபற்றிய விவரங்கள் எதுவும் எனக்கு வரவில்லை. பட்டியலை பார்த்தால் தான்
எதுவும் சொல்ல முடியும் என்றார்.
பெற்றோர்களிடம்
அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் எப்போது கட்டணத்தை திரும்ப கொடுக்கும்.
இதற்கான நடவடிக்கைகளை இயக்குனர் எடுப்பாரா? என்று பெற்றோர்கள் ஆவலுடன்
எதிர்பார்க்கின்றனர். இன்னும் ஒரு ஆண்டிற்கு இதே கல்வி கட்டணம் தான்
நிர்ணயிக்க வேண்டும்.
இந்த கல்வி
ஆண்டு முடிவுறும் நிலையில் ஏழை, நடுத்தர பெற்றோர்களிடம் அதிகம் வசூலித்த
கட்டணத்தை திருப்பி கொடுக்க மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் விரைவாக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பெற்றோர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...