ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500
கி.மீ தொலைவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஜெய்போர் நகரில்
அரசுக்கு சொந்தமான உமுரி ஆசிரம பள்ளி உள்ளது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட
வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில்
தங்கியிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.
பள்ளியின் தலைமை ஆசிரியரும் விடுதி கண்காணிப்பாளரும் இந்த விஷயத்தை
நிர்வாகத்திடம் சொல்லாமல் மறைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி மாணவிக்கு
குழந்தை பிறந்தது. பள்ளி அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும்
உடனடியாக காவல் துறையில் புகார் அளித்தனர். பின்னர் செமிலிகுடா
காவல்துறையின் மேற்பார்வையில் அந்த குழந்தையையும் அதன் தாயான ஆறாம் வகுப்பு
மாணவியையும் ஜீப்பில் கொண்டு போய் மாணவியின் பெற்றோர் வசிக்கும்
உப்பர்கண்டியில் போய் விட்டு வந்தனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த விஷயம் தெரிய
வந்ததும் ஜெய்போர் நலத்துறை விரிவாக்க அதிகாரி இந்த சம்பவம் குறித்த தகவலை
ஜெய்போர் போலீசாரிடம் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு தலைமை
ஆசிரியர் கைலாஷ் வர்மா மற்றும் விடுதி கண்காணிப்பாளர் சபிதா குரு ஆகியோரை
காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரத்தில்
பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெறுவது இது இரண்டாவது முறை. கடந்த ஜனவரி 23
ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் லிங்ககடாவில் உள்ள பள்ளி விடுதியில்
குழந்தையை பிரசவித்தது நினைவு கூரத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...