அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வந்த தாற்காலிக பணியாளர்கள்
4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்த தாற்காலிக பணியாளர்களுக்கு, அதன் நிர்வாக இயக்குநர் டி. ஆல்பர்ட் தினகரன் பணி நிரந்தர ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 26 மண்டலங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் தாற்காலிகமாகப் பணியாற்றி வந்த 4,100 பேருக்கு அந்தந்த நிர்வாக இயக்குநர்களால் பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இதன் மூலம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய 1,572 பேரும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 161 பேரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த 751 பேரும், சேலம் கோட்டத்தைச் சேர்ந்த 358 பேரும், கோவைக் கோட்டத்தைச் சேர்ந்த 413 பேரும், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த 468 பேரும், மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 182 பேரும், திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த 195 பேரும் பயனடைந்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...