ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக
ரூ. 3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள்
சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில்
திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி தலைமை
வகித்தார். மாநில துணைத் தலைவர் மதி (எ) சந்திரசேகரன் தொடக்கிவைத்தார்.
மத்திய அரசு வழங்குவது போல், மருத்துவப் படியாக மாதந்தோறும் ரூ. 500 வழங்க
வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக
ரூ. 3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். ஓய்வூதிய குடும்பப் பாதுகாப்புத்
திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் இறக்கும்போது, அரசுப் பணியாளர்கள் போன்று ரூ.
1.50 லட்சம் வழங்க வேண்டும்.
அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவதுபோல ஈமச் சடங்கு முன்பணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.
மூத்தக் குடிமக்களாகிய ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் பேருந்துக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்க வேண்டும்.
ஓய்வூதியர் மாதத்தில் எந்தத் தேதியில்
இறந்தாலும் அந்த மாத ஓய்வூதியத்தை முழுமையாக வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்
என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, துணைத்
தலைவர்கள் கந்தசாமி, செல்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர்
லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...