பிளஸ் 2 விடைத்தாள்களுடன் ‘டாப் ஷீட்‘ எனப்படும் முகப்பு சீட்டு இணைத்து
தைக்கும் பணி அந்தந்த தேர்வு மையங்களில் இன்று (9ம் தேதி) தொடங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி
வரை நடைபெறுகிறது.
தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற்று
வருகிறது. சில ம£வட்டங்களில் செய்முறை தேர்வு 10ம் தேதி தொடங்க உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள்
பாதுகாப்புடன் இருக்கும் வகையிலும், குளறுபடிகளை தவிர்க்கவும்
விடைத்தாள்களின் வடிவங்களில் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கு குறுக்கு கோடிட்ட விடைத்தாள்கள்
வழங்கப்படுகிறது. இப்பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு
விடைத்தாள்களை பயன்படுத்த வேண்டும் என்று தனி அட்டவணையே
வகுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் ஏற்கனவே தேர்வு மையங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட வேண்டிய மாணவர்களின் விபரங்கள் அடங்கிய
டாப்ஷீட் எனப்படும் முகப்புத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது. முகப்பு தாள்களை விடைத்தாளுடன் சேர்த்து தைக்கும்
பணிகள் அந்தந்த தேர்வு மையங்களில் இன்று தொடங் குகிறது. இதற்காக தனியே
டெய்லர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...