பாலாசூர் (ஒடிசா):அணு ஆயுதத்தை ஏந்திச்
செல்லும் திறன் உடைய, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலத்தில்
நேற்று வெற்றிகரமாக நடந்தது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட,
பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலம் சாந்திபூரில் நேற்று
நடத்தப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, ஏவுகணை ஏவப்பட்டது. இந்த
ஏவுகணை, குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும், ஏவுகணைச் சோதனை
வெற்றியடைந்ததாகவும்,
மத்திய பாதுகாப்பு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள்
தெரிவித்தனர். இந்த ஏவுகணை, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரானது. 500 முதல்,
1,000 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, துல்லியமாக தாக்கும்
திறன் உடையது. சோதனையின் போது, ஏவுகணையின் செயல்பாடு, போக்கு ஆகியவை,
ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டதாக, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...