வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம்
தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ,
மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து,
தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது.
பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகளின்போது,
முதல் இரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விடைத்தாளின்
எந்தவொரு பகுதியிலும், தேர்வு எண்ணையோ, பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது.
தேர்வின்போது, 'ரப் வொர்க்' செய்வதற்கு, விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே
பயன்படுத்த வேண்டும். விடைத்தாளின் வலது பக்க ஓர பகுதியை பயன்படுத்தக்
கூடாது. ஏனெனில், வலது ஓரப் பகுதி, மதிப்பெண் குறிப்பிட
ஒதுக்கப்பட்டுள்ளது. விடைகளை எழுதி, அவற்றை கோடிட்டு, அடிக்க நேர்ந்தால்,
'மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது' என்ற குறிப்புரையை எழுத வேண்டும்.
பயன்படுத்தாத பக்கங்களை கோடிட்டு அடித்து, 'பயன்படுத்தப்படாத பக்கம்
என்னால் அடிக்கப்பட்டது' என, குறிப்பிட வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...