பிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து படிப்பதை, பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் அதிகபட்ச மதிப்பெண்களே தீர்மானிக்கின்றன.
இதற்காக பிளஸ்-2 மாணவ-மாணவிகள் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பள்ளியில் பாடங்களை படிப்பதுடன், தனியாக சிறப்பு பயிற்சி மையங்களுக்கு (டியூசன்) சென்று கடினமான பாடங்களுக்கு பயிற்சி பெறுவது வழக்கம். அத்துடன் காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டுக்கு வந்து படிப்பதை மாணவர்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
பாடத்திட்டங்கள்
இந்தநிலையில் கடினமான பாடங்களை மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ள முடியாமல், பயிற்சி மையங்களுக்கு செல்வதை தவிர்க்கும் வகையிலும், அதற்காக கணிசமான அளவுக்கு நேரத்தை செலவிடுவதை தவிர்க்கும் வகையிலும், பிளஸ்-2 பாடத்திட்டங்களை கொண்ட புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அந்த மென்பொருளை கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் (ராப்டர் டெக்னாலஜிஸ்) தயாரித்து, கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. அதில் பாடத்திட்டங்களின் முக்கிய பகுதிகள், முக்கிய குறிப்புகள் புத்தக வடிவில் உருவாக்கப்பட்டு, அதன் அருகிலேயே அந்த பகுதியில் கூறப்பட்டு உள்ள தகவல் என்ன? என்பதை விளக்கும் வீடியோவும் இணைக்கப்பட்டு உள்ளது.
மென்பொருள் தயாரிப்பு
மாணவர்கள் அந்த பாடப்பகுதியை படிக்கும் போது, ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீடியோவை பயன்படுத்தி விளக்கம் பெறலாம். தலைச்சிறந்த ஆசிரியர்களை கொண்டு பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு, மென்பொருளாக உருவாக்கப்பட்டு உள்ளன. அது பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு இந்த மென்பொருள் வழங்கப்பட உள்ளது. இதன்படி பள்ளிகளில் உள்ள கணிப்பொறிகளில் மென்பொருள் உள்ளீடு செய்யப்படும். மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் ஆசிரியர்களின் உதவியோடு பாடங்களை படிக்கலாம் என்று மென்பொருள் வடிவமைப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:-
பிளஸ்-2 பாடத்திட்டங்களை கொண்ட புதிய மென்பொருள் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கற்பித்தலில் ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒவ்வொரு விதமான திறமைகள் உண்டு. ஒரு ஆசிரியர் நடத்தி புரியாத பாடம், வேறொரு ஆசிரியர் நடத்தும் போது மாணவர்களுக்குபுரிந்து விடுகிறது.
இதற்கு காரணம் பாடத்தை மாணவர்களுக்கு எளிதாக புரிய வைப்பதுதான். இந்த மென்பொருள் மாணவர்களுக்கு எளிதாக பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் போன்றது. மாணவர்களுக்கு பாடப்பகுதியில் சந்தேகம் ஏற்படும்போது, அதில் உள்ள வீடியோ ஆசிரியரை போல் விளக்கம் அளிக்கும். இதனால் மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்வதுடன் அதிக மதிப்பெண் பெற முடியும். இந்த மென்பொருள் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...