பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது.
முதன்மை கண்காணிப்பாளர், துறைஅலுவலர், பறக்கும்படையினர், அறை
கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது.
இதற்கான கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில்
பழநி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூரில் நேற்று நடந்தது. அறை
கண்காணிப்பாளர்களுக்கு புதிதாக குலுக்கல் முறையில் தேர்வு மையம்
ஒதுக்கப்பட்டது. சிலருக்கு 50 கி.மீ., தூரத்தில் உள்ள மையங்களில் பணி
வழங்கப்பட்டது. இதை கண்டித்து பழநி, வேடசந்தூரில் ஆசிரியர்கள் கூட்டத்தை
புறக்கணித்து வெளியேறினர். இதேநிலை மற்ற மாவட்டங்களிலும் உள்ளதால், தேர்வு
நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி
ஆசிரியர் கழக நிர்வாகிகள் சலேத்ராஜா, ராமகிருஷ்ணன், செல்வராஜ் கூறியதாவது:
புதிய முறையில் 15 கி.மீ., தூரத்திற்குள் பணி வழங்க வேண்டுமென
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறையை மீறி 50 கி.மீ., தூரத்தில் உள்ள
மையங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் தேர்வு பணியை
புறக்கணிப்போம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...