என்.ஐ.டி.,
திருச்சிராப்பள்ளி நடத்தும் வருடாந்திர டெக்னோ மேனேஜ்மென்ட் திருவிழாவான
பிரக்யான், பிப்ரவரி 26 முதல் மார்ச் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாபெரும்
விழாவில், கண்காட்சிகள், சிறப்புரைகள் உள்ளிட்ட பலவிதமான நிகழ்வுகள்
நடைபெறும். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று Crossfire sessions.
இந்தாண்டு
பிரக்யான் "ஸ்பேஸ் டெக்னாலஜி" என்ற கருத்தாக்கத்தில்(theme)
நடத்தப்படவுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட பிரக்யான், ISO 9001
& 2012 என்ற முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
Crossfire
என்பது ஒரு வருடாந்திர குழு கலந்தாய்வு நிகழ்வாகும். இதன்மூலம்,
கல்வித்துறை, தொழில்துறை மற்றும் அரசு ஆகியவற்றுக்கு, மாணவர் சமூகத்துடன்
கலந்துரையாடும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தாண்டு Crossfire நிகழ்வின்
தலைப்பு, "PUTTING AN INDIAN ON THE MOON SEEMS EASIER THAN KEEPING AN
INDIAN STREET CLEAN" என்பதாகும்.
கண்காட்சி
பிரக்யான்
திருவிழா கண்காட்சியில், Robotic Arms, 3D printers, Wind turbines
உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறுகின்றன. அறிவியல் ஆர்வமுள்ளவர்கள்,
பிரக்யான் கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம், தங்களுக்குத் தேவையான அறிவை
சிறப்பான முறையில் மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்தக்
கண்காட்சியின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், நிலவிலிருந்து நாசாவின்
அப்பல்லோ மூலம் கொண்டுவரப்பட்ட 120 கிராம் எடைகொண்ட ஒரு கல்,
பங்கேற்பாளர்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
கண்காட்சியில்
பங்கேற்கும் மாணவர்கள், தங்களுடைய சொந்த புராஜெக்ட்களையும் பார்வைக்கு
வைத்து, அதை விளக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள். இப்படியாக, இந்த
பிரக்யான் திருவிழாவில், அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, ஏராளமான
நன்மைகள் காத்துக் கொண்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...