பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை:
தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதவற்றை,
மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் முகப்புச்
சீட்டில் உரிய இடத்தில் கையெழுத்திட வேண் டும், விடைத்தாளின் ஒரு
பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இரண்டு
பக்கங்களிலும் எழுத வேண்டும். செய்முறைகள் அனைத்தும் விடைத்தாளின்
பகுதியிலேயே இருக்க வேண்டும்; வினா எண்ணைத் தவறாமல் எழுத வேண்டும். இரு
விடைகளுக்கு இடையில், இடைவெளி விட்டு எழுத வேண்டும்; வினாத்தாளின் வரிசை
யை, மதிப்பெண்கள் பக்கத்தில் குறிக்க வேண்டும்; விடைத்தாளில் விடைகளை
கறுப்பு அல்லது நீல மை பேனாவால் எழுத வேண்டும். தேர்வு முடியும் போது,
விடைத்தாளில் எழுதாத பக்கங்கள் இருந்தால், அவற்றில் குறுக்குக் கோடு போட
வேண்டும்; இதேபோல் எதை செய்யக்கூடாது என்றும் மாணவர்களை அறிவுறுத்த
வேண்டும்.
பெயர் எழுதக்கூடாது:
மேலும், வினாத்தாளில் எந்தக் குறியீடும் இடக்கூடாது; விடைத்தாளை
சேதப்படுத்தக் கூடாது; விடைத்தாளின் எந்தப் பக்கத்திலும் தேர்வு எண் அல்லது
பெயர் எழுதக் கூடாது. வண்ண பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது;
விடைத்தாளில் கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது;
விடைத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது. இவ்வாறு
மாணவர்களை அறிவுறுத்துமாறு, பள்ளிகளுக்கும், தேர்வு மையங்களுக்கும்,
கண்காணிப்பாளர்களுக்கும், தேர்வுத்துறை இயக்குனர், சுற்றறிக்கை அனுப்பி
உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...