தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்ட 200 மாணவ,
மாணவியர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
700 மாணவர்கள் இந்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர் என்று தகவலால் அங்கு
பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம்
என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
தெலுங்கானாவில்
பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து, வராங்கல் மாவட்டத்தில் உள்ள
தர்மாராம் அரசு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக பன்றிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் சத்து மாத்திரைகள் பள்ளி
நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் மாத்திரை
சாப்பிட்ட குழந்தைகளுக்கு, 1 மணியளவில் பகல் உணவாக ட்ட சாம்பார் சாதம்
வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி,
மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளனர்.பல்வேறு வயதுடைய சுமார் 200க்கும் மேற்பட்ட
குழந்தைகளுக்கு வராங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
குழந்தைகளுக்கு சிகிச்சை
அளித்து வரும் டாக்டர்கள் குழுவிடம் பாதிப்பிற்கான காரணம் குறித்து
கேட்டதற்கு, இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டது குழந்தைகளுக்கு
வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் காரமான
சாம்பார் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம், வாந்தி ஏற்பட்டுள்ளது என
தெரிவித்துள்ளனர். சுமார் 700 மாணவர்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டதாக
கூறப்படுகிறது. கூடுதல் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை ஐதராபாத்திற்கு
கொண்டு செல்ல தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கருத்து
தெரிவித்துள்ள தெலுங்கானா தெலுங்கு தேசம் கட்சி தலைவர் எர்ரபள்ளி தயாகர்
ராவ், அரசின் அலட்சியமே இதற்கு காரணம். இதற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை
அமைச்சர் லட்சுமண ரெட்டி பதவி விலக வேண்டும். வெறும் வயிற்றில்
குழந்தைகளுக்கு எப்படி மாத்திரை வழங்கினார்கள்? குழந்தைகளை, அரசு மருத்துவ
பரிசோதனை செய்யும் பன்றிகளை போல் நினைத்து செயல்பட்டுள்ளது என
குற்றம்சாட்டி உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...