பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என கரூரில்
வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி
ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் இரா.
ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் மா. சக்திவேல், அமைப்புச் செயலர்
வி.டி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர்
பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இதில் ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் செ. தீனதயாளன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்:
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும்
மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் உழைப்பு ஊதியத்தை உயர்த்தி வழங்க
வேண்டும். 2004 - 2006 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியம்
அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை
பணிவரன்முறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான
தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். பிளஸ் 2 அரசு பொதுத்
தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு
விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. முடிவில் ச. உமா நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...