தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல,
பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள்
எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 16 ஆயிரத்து 947
பேர் கூடுதலாகவும், பத்தாம் வகுப்பில் 33 ஆயிரத்து 816 மாணவர்களும்
கூடுதலாக தேர்வு எழுதுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் மாதம் 5ம்
தேதி தொடங்குகிறது. விடைத்தாள் தைக்கும் பணி மற்றும் வினாத் தாள்
தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது பிளஸ்2 தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகளும் நடந்துள்ளன.
இது குறித்து தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் வழியில்..
தமிழ் வழியில் பிளஸ் 2 தேர்வை 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகள்
எழுதுகின்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 30 ஆயிரத்து 590
பேர் தமிழ் வழியில் எழுதுகின்றனர்
சிறையில்..
இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வை 77 சிறைவாசிகள் புழல் சிறையில்
தேர்வெழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 130 சிறைவாசிகள்
எழுதுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 தேர்வு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி
தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 6,256 பள்ளிகளை சேர்ந்த 8
லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 2,377
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 3 லட்சத்து 90
ஆயிரத்து 753 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகளும்,
தனித்தேர்வர்களாக 42 ஆயிரத்து 963 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், மாணவர்களை விட 61 ஆயிரத்து 558 மாணவிகள் அதிகளவில் தேர்வெழுதுகின்றனர்.
10ம் வகுப்பு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதி
தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைகிறது. இதற்காக 11 ஆயிரத்து 827 பள்ளிகளை
சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் மாணவர்கள் 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 பேரும், 5 லட்சத்து 32
ஆயிரத்து 186 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 50 ஆயிரத்து 429 பேரும் பத்தாம்
வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 3,298 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வில் சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவ,
மாணவியர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 33,816 மாணவ, மாணவிகளும்
தேர்வெழுதுகின்றனர்.
வினாத்தாள் கட்டுக் காப்பீட்டு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய
காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதிலும்,
12ம் தேர்விற்கு 4,000க்கும் மேற்பட்டவர்களும். 10ம் வகுப்பு பொதுத்
தேர்விற்கு 5,200க்கும் மேற்பட்டவர்களும் பறக்கும்படை உறுப்பினர்கள்
தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முறைகேட்டை தடுக்க 9200 பறக்கும்படை
சென்னை தேர்வு மையங்கள்
சென்னையை பொறுத்தவரை 412 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 653 மாணவர்கள், 28
ஆயிரத்து 750 மாணவிகள் என மொத்தம் 53 ஆயிரத்து 403 மாணவ, மாணவியர்கள் 12ம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 144 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பை பொறுத்தவரை சென்னையில் 578
பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரத்து 124 மாணவர்கள், 29 ஆயிரத்து 230 மாணவிகள் என
மொத்தம் 57 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 209
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...