முதுநிலைப் பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில்
சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மே 16, 17 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் பதிவு செய்ய முடியும்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல்
கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில்
மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு
வருகிறது.
2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மே 16-ஆம் தேதியும் முதுநிலை
பொறியியல் படிப்புகளுக்கு மே 17- ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட
உள்ளது.
இதற்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம்.
பதிவு செய்ய ஏப்ரல் 20 ஆம் தேதி கடைசி நாள். சென்னை மையத்தில் நேரடியாகப் பதிவு செய்ய ஏப்ரல் 22 கடைசித் தேதியாகும்.
இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...