நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை விவரங்களுடன் கூடிய மின்னணு விரல் ரேகை பதிவு முறையை செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே அலுவலகங்களில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும் முறை அமலில் உள்ளது. அதேநேரத்தில் ரயில்வே பணிமனைகளில், தொழிற்சாலைகளில் வருகைப்பதிவு அட்டை முறை உள்ளது.
மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில் ரயில்வேயும் ஆதார் அட்டை அடிப்படையிலான மின்னணு விரல் ரேகை முறை வருகை பதிவை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக ரயில்வேயில் பணியாற்றுபவர்கள் அனைவரும் ஆதார் அட்டையை வாங்கி விட்டதை உறுதி செய்ய மண்டல பொதுமேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வருகை பதிவு முறையை முதல்கட்டமாக, மண்டல ரயில்வே தலைமை அலுவலகங்கள், தொழிற்சாலை, பராமரிப்பு பணிமனைகளில் நிர்வாக அலுவலகங்கள், கோட்ட ரயில்வே அலுவலகங்கள், கொல்கத்தா மெட்ரோ, லக்னோ ரயில்வே வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய மையங்களில் மட்டும் அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு தேவையான உதவிகளை தேசிய தகவல் மையத்திடம் பெற்றுக் கொள்ளும்படியும் மண்டல பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணிகளை மண்டல ரயில்வேக்கள் ஏதும் தொடங்காததால் மத்திய அரசு உத்தரவுப்படி ஜன.26ம் தேதி முதல் புதிய வருகை பதிவு முறையை ரயில்வேயில் அறிமுகமாகவில்லை. எனவே ஏப்.1ம் தேதி முதல் புதிய முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே வாரியம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...