Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி பிப்.16 முதல் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

                   1807 முதுகலை ஆசிரியர்  பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 10ம் தேதி  நடைபெற்றது. இத்தேர்விற்கு 2,02,231 நபர்கள் விண்ணபித்திருந்தனர். அதில் 1,90,922 நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர். இதையடுத்து 22.01.2015 அன்று அனைத்து பாடங்களுக்கு விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, ஆட்சேபனை இருந்தால் 29.01.2015க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட கேட்டுக் கொள்ளப்பட்டது. 


                   இதையடுத்து இன்று மாலை தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு 1:1 என்ற முறையில் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்படவுள்ளது. சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு இம்மாதம் 16ஆம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சான்றிதழ் சரிப்பார்ப்புக்கான இடம் மற்றும் அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படவுள்ளது. தற்காலிக தேர்ந்தோர் பட்டியலில் மொத்தம் 1946 நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
           1,868 முதுகலை பட்டதாரி பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,868 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

               அந்த இடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தேர்வு நடத்தியது. இந்த தேர்வு கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 499 மையங்களில் நடைபெற்றது. தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள்.
 
              முடிவு வெளியீடு தேர்வுக்கான வினா-விடைகள் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது. பின்னர் விடைகளுக்கான நிபுணர்களுடன் கலந்துபேசி இறுதியான விடை தேர்ந்து எடுக்கப்பட்டது. அதன்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடையும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு 1:1 என்ற கணக்கில் தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்( www.trb.tn.nic.in) காணலாம். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
 




2 Comments:

  1. தமிழ் பாடத்தில் 57 வது வினாவிற்கு எந்த கீ ஆன்சர் கொடுக்கப்படவில்லை. அதற்கு என்ன விடை என அறிவிக்கப்படவில்லை. பதில் கூறுங்கள் நண்பர்களே

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive