Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடம் காலி:1,400 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதிப்பு

              கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட ஆசிரியர் பணியிடங்கள்,1,400 அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஐ.டி., பிரிவு வளர்ச்சி தாக்கத்தால் அனைத்து பள்ளி மேல்நிலை வகுப்பிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இந்த பாடப் பிரிவில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

          ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முறையாக பயிற்சி பெற முடியவில்லை. பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த வழக்கு நிலுவை யில் உள்ளதால், புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதில், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

              தற்போது, 1,200 பள்ளிகளில் மட்டுமே, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் ஆசிரியர்கள் உள்ளனர். மீதமுள்ள, 1,400 பள்ளிகளில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. எனவே பகுதிநேர ஆசிரியர்களைக் கொண்டு, சில பள்ளிகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் பாடங்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சில பள்ளிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆய்வகங்கள் பூட்டப்பட்டுள்ளன. கடந்த, 2013 அக்டோபரில், ஐகோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 2014ஜனவரிக்குள், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் பரசுராமன் கூறுகையில், ''தமிழகத்தில், 1,400 பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ''இதனால், மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, பள்ளிக்கல்வித்துறை உடனே தீர்வு காண வேண்டும்,'' என்றார்.




7 Comments:

  1. Ithai pondara kanakku mattum solkirargal aanal enthavitha nadavadikaium ellai... nangal mattum paavam seithavargal.... pls pls computer science with B.Ed., course'ah paada thittathil erunthu neekkividungal.. engalai pol yaarum eamara maattargal..

    ReplyDelete
  2. Naanga padichathu enga thappa computer Science ku BEd iruntha nalla thanea nanga padichoam pls intha subject padichavangaluku enna theervu tell me?
    Engaloda nilamai enna ?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மேல்நிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது என்ற இப்பதிவில் அடங்கிய வாசகம் பகுதிநேர ஆசிரியர்களை பெரும் மனவேதனை அடையச் செய்துள்ளது. இருப்பினும், மேல்நிலை கல்வியில் கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும் என்ற தங்களின் கூற்று பாராட்டுதலுக்குரியது என்ற போதிலும் பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் பணிசெய்தால் போதுமானது என்ற அரசாணை இருக்க, அதை பொருட்படுத்தாமல் மேல்நிலை கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களின் நலன்கருதி எந்த வித எதிர்பார்ப்புமின்றி மேல்நிலை கணினி அறிவியல் பாடம் கற்பிக்கும் செயலை மன நிறைவோடு செய்து வருகிறோம். மேலும் பகுதிநேர ஆசிரியர்கள் என்றாலும் மேல்நிலை கணினி பாடம் கற்பிக்கும் முழு கல்வி தகுதியுடன் பணியமர்த்தப்பட்டுள்ளோம். எனவே இனிவரும் காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களின் அயராத உழைப்பை இழிவுபடுத்தும் எந்த ஒரு பதிப்பையும் வெளியிட வேண்டாம் என்று அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு. கலையரசன்,

      பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெற்றவர்களை நிரப்பினால், எவ்வாறு தங்களுக்கான பணி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என தாங்கள் வருத்தப்படுவீர்களோ, அதே போலத்தான் மேல் நிலை கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கான ஆசிரியருக்கு கணினி பட்டம் உடன், பி.எட் அவசியம் படித்திருக்க வேண்டும் - என அடிப்படைத்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பணி வாய்ப்பு பாதிக்கப்பட்டால் அவர்கள் முறையிடத்தான் செய்வார்கள். அதற்காக தங்களை குறைகூறுகிறார்கள் என கருத வேண்டாம். (பகுதிநேர கணினி ஆசிரியர்களில் பலர் பி.எட். பட்டம் பெறாதவர்கள் தான் என்பதை உனர்ந்திருப்பீர்கள்.) எனவே வருத்தப்படவேண்டாம். தங்களால் இயன்றவரை மாணவர்களுக்கு உதவும் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

      (பின்குறிப்பு - இருப்பினும், தங்களுக்கு வருத்தம் ஏற்படுத்திய ”போதிய தகுதி இல்லாத ஆசிரியர்கள்” எனும் வார்த்தைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது)-

      நன்றி!
      அன்புடன் - பாடசாலை.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பாடசாலை இணையதளத்திற்கு மனமார்ந்த நன்றிகள் . தமது வேண்டுகோளுக்கிணங்க தகுதியில்லாத பகுதிநேர கணினி ஆசிரியர்கள் என்ற வார்த்தை நீக்கப்பட்டுவிட்டது. குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும்.பகுதிநேர கணினி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பி.எட் பட்டம் பெற்றவர்கள். மாவட்டத்திற்கு நான்கைந்து பேர் வீதம் மட்டுமே பி.எட் பட்டம் பெறாமல் உள்ளனர். அவர்களும் தொலைதூர கல்வி வாயிலாக பி.எட் பட்டம் பெறும் தருவாயில் உள்ளனர். பகுதிநேர ஆசிரியர்களில் நிறைய பேர் எம்.பில் பட்டம் பெற்று கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்கள். தற்போது அவர்கள் 6-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்கள். அதையும் மறவாதீர்கள். இருப்பினும் தங்கள் கோரிக்கை ஏற்க்கப்பட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive