போளூர் அருகே ஜம்னாமரத்தூர் பள்ளி விடுதியில்
10ம் வகுப்பு மாணவி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈவ்டிசிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக பரபரப்பு கடிதம் சிக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அருகே அத்திபட்டு பகுதியில் புனித
வளவனார் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் ஆண்கள் மற்றும்
பெண்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதி உள்ளது. புதுப்பாளையம் ஒன்றியம்
கீழ்கொல்லை கிராமத்தை சேர்ந்த விவசாயி தாமோதரன் மகள் லாவண்யா இப்பள்ளி
விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலை 6.55
மணிக்கு வருகை பதிவேடு எடுக¢கும் நேரத்தில் விடுதியில் இருந்தாராம். பிறகு
அனைத்து மாணவிகளும் குளிக்க சென்றனர். ஆனால் லாவண்யா மட்டும் நீண்ட நேரமாக
காணவில்லை.
அவரது அறைக்கு சென்று சக மாணவிகள் பார்த்தபோது
அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர்
துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து விடுதி காப்பாளர் அன்னம்மாள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று
பார்த்தபோது மாணவி இறந்திருந்தார். அவரது கையில் ஒரு கடிதம் இருந்தது.
புகாரின்படி போளூர் டிஎஸ்பி ரா.கணேசன் மற்றும் போலீசார் வந்து மாணவியின்
சடலத்தை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு
அனுப்பிவைத்தனர். லாவண்யாவின் கையில் இருந்த கடிதத்தில், ‘அம்மாவிற்கு
என்னை மன்னித்துவிடுங்கள். இந்த உலகத்தில் வாழ பிடிக¢கவில்லை. எனக்கு
அம்மா, அப்பா, தம்பி, தங்கை எல்லாரையும் பிடிக்கும்.
நீங்கள் சொல்லும்
பேச்சை நான் கேட்கவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் வீட்டில் தான் இறக்க நினைத்தேன், ஆனால்
விடுதியில் இறக¢கிறேன். இந்த பள்ளிக்கும், விடுதிக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை. தங்கையை நன்றாக படிக்க வைக¢கவும். எந்த விடுதியிலும்
சேர்க¢கவேண்டாம். அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் தங்கும் விடுதியில்
சேர்க¢கவும். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க¢க வேண்டாம். என்னை
மன்னித்துவிடும்மா. ஆனால் என்னை கலாய்க்கிரவங்க நல்லா இருக்க மாட்டாங்க.
நல்லாவே இருக¢க கூடாது. அப்படி நல்லா இருந்தாலும் நான் சும்மா விடமாட்டேன்.
எனக்கு உதவி செய்த தோழிகளுக்கு நன்றி’ என கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக¢குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் தற்கொலை சம்பவம் ஜம்னாமரத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ஈவ்டிசிங் கொடுமைக்கு சட்டத்தில் தண்டனைக்கு இடமுள்ளது. தற்கொலை தீர்வாகாது.மாணவிகள் தைரியமாகப் புகார் தர முன்வந்தால்தான்ஈவ்டிசிங் கொடுமைக்கு முடிவு கட்ட இயலும்.
ReplyDelete