''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார்
மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள்
ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர்
கூறியதாவது:
பாஸ்போர்ட் பெற 13 வித முகவரி ஆவணங்கள் ஏற்கப்படுகின்றன. அதில்
தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களும் உண்டு. தற்போது மக்கள்
கோரிக்கையை ஏற்று தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி வங்கிகளில் கணக்கு
வைத்துள்ளவர்கள் அந்த புத்தகங்களையும் முகவரி ஆவணமாக காட்டி
பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 105 வங்கிகளின் பட்டியலை
ரிசர்வ் வங்கி ெவளியிட்டுள்ளது. அந்த விவரங்களை www.passportindia.gov.in
மற்றும் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் அறியலாம்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் துறை
தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் மட்டுமே தடையில்லா சான்று வழங்கலாம் என
மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இவற்றில் பணிபுரியும் பி, சி, டி பிரிவு
ஊழியர்கள் இனி பணியமர்த்தும் அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று
விண்ணப்பிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளை சேர்ந்த
பி,சி,டி பிரிவு ஊழியர்கள் அந்த துறை பணி நியமன அதிகாரியிடம் தடையில்லா
சான்று பெறலாம்.
முதுநிலை போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை
எஸ்.பி.,யிடம், டி.எஸ்.பி., முதல் கூடுதல் எஸ்.பி., வரை டி.ஜி.பி.,யிடம்,
எஸ்.பி.,க்கள் உள்துறை அமைச்சகத்திடமும் தடையில்லா சான்று பெற்று
விண்ணப்பிக்கலாம் என்றார்.
2 கோடிக்கும் மேல் பார்வைகளை கடந்த பாடசாலை வலைதளத்திற்கும் அதன் அட்மின் அவர்களுக்கும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
ReplyDelete