10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்
தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வியூகம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர்
தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி
23-ஆம் தேதி நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதேபோல், 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள்
நடந்து வருகின்றன. அதில், விடைத்தாள் முகப்பு சீட்டுக்கள் தைக்கும் பணி,
அந்தந்த தேர்வு மையங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்தகட்டமாக, பொதுத்தேர்வு கண்காணிப்பு
பணிகள் மற்றும் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக பிப்ரவரி 23-ஆம் தேதி
ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
எஸ்.மகேஸ்வரன் முன்னிலையிலும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக
அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வருவாய்த்துறை, மின்துறை, தீயணைப்பு
துறை, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதில், தேர்வு மையங்களில் இடை நிறுத்தம்
இல்லாமல் மின்விநியோகம், போக்குவரத்து வசதி, தேர்வு மையங்கள் மற்றும்
வினாத்தாள் வைப்பறைகளில் போலீஸார் பாதுகாப்பு, தேர்வில் மாணவர்கள் பார்த்து
எழுதுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைத்தல் உள்ளிட்டவைகள்
குறித்து வியூகம் அமைக்கப்பட இருப்பதாக, முதன்மை கல்வி அலுவலர்
வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...