ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற
விரும்பும் தனியார் பதிப்பகங்கள் மாநிலப் பொதுப் பள்ளி கல்வி வாரியத்துக்கு
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 9-ஆம் வகுப்பு வரையான பாடத் திட்டம் மாநிலக் கல்வியியல்
ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு
மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையிலும், முப்பருவ முறையின் அடிப்படையில் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்களுக்கு
(தமிழ் நீங்கலாக) ஒப்புதல் பெற விரும்பும் தனியார் பதிப்பகங்கள் மாநில
பொதுப்பள்ளி கல்வி வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் புத்தகங்களின் 5 நகல்களை உறுப்பினர்- செயலர், மாநிலப் பொதுப்பள்ளி
கல்வி வாரியம் (பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)), கல்லூரி
சாலை,
சென்னை-6 என்ற முகவரிக்கு வரும் மார்ச 31-க்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பவேண்டும்.
பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.
அதோடு, பல வண்ணங்களில் ஏ4 அளவுள்ள தாளில் சிடிபி முறையில் புத்தகங்கள்
அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என பொதுப்பள்ளி கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...