ரிசர்வ் வங்கி (RBI), நாளை வெளியிடயிருக்கும் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% என்ற அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சில்லரை பணவீக்கம் 5% ஆகவும், மொத்த விலை பணவீக்கம் 0.1% ஆகவும், குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது இன்னும் கூடுதலான அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை சமாளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு ரூ.24,000 கோடி கிடைத்துள்ளது, அதில் செயில் நிறுவன பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கடந்த வருடம் ரூ.1,719 கோடி மத்திய அரசுக்கு நிதி கிடைத்துள்ளது.
மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை கூடுதலாக அதிகரிக்கப்படுவதால் இந்த வருடத்தின் பங்கு விற்பனை ரூ.43,425 கோடி என்றஇலக்கை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரியண்டல் வங்கியின் வர்த்தக தலைமையாளரான அனிமீஸ் சவுகான், ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன் பிப்ரவரி 3ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...